கண்ணதாசன் விருதுகள்

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு, ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர். ரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது  கவியரசு கண்ணதாசன் நினைவாக திரு.கிருஷ்ணகுமார் என்பவரால் நிறுவப்பட்டு கோவை கண்ணதாசன் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
விருது வழங்கும் விழா கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளாகிய 24.06.2012 ஞாயிறு காலை 10.00 மணிக்கு கோவை கிக்கானி மேல்நிலப்ப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடைபெறுகிறது. திரு. இல.கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த விருதுகளை வழங்குகிறார்

இதற்கு முன்னால் இந்த விருதுகள், எழுத்தாளர்கள் திரு.நாஞ்சில்நாடன், திரு.வண்ணதாசன், திரு.எஸ்.ராமகிருஷ்ணன்,  இசைக்கலைஞர்கள் திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி, திரு.சீர்காழி சிவசிதம்பரம்,கவியரசு கண்ணதாசனின் உதவியாளர் திரு.இராம. முத்தையா ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *