அற்புதருக்கு நாய்க்குட்டிகளைப் பிடிக்கும். அல்ல அல்ல.. அற்புதருக்கு நாய்க்குட்டிகளையும் பிடிக்கும். ஆனால் அவர் அற்புதராயிருப்பதன் முக்கியக் காரணங்களில் ஒன்று, நாய்க்குட்டிகளுக்கும் அவரைப் பிடிக்கும் என்பதே பலநேரங்களில் அற்புதரின் வாகனக் கதவுகளை திறக்கும்போதெல்லாம் வெண்பந்துபோல் ஒரு நாய்க்குட்டி முதலில் வெளியே குதிக்கும்.

அவருடைய எல்லைக்குள் எல்லா நாய்களும் ஒரேவிதமான தன்மையில வளர்ந்தன. வரவேற்றுக் கொண்டேயிருக்கும் வால்களும் வாஞ்சையைக் கொட்டும் விழிகளுமாய் அவை அற்புதரின் பிரதேசத்தை வலம் வந்தன.

பாதங்களைப் பணிபவர்களை ஆசீர்வதித்த அடுத்தநொடியே மெல்ல விலகும் அற்புதரின் கரங்களில் நாய்கள் தங்களின் ஒவ்வொரு கால்களாய் வைத்து நீவிவிடச் சொல்லும். எந்த உயிருடனும் செலவிடும் நிமிஷங்களில் அற்புதர் அந்த உயிருடன் முழுமையாய் இருப்பதால் அந்த சில நிமிஷங்கள் தரும் உயிர்ப்பு மிக்க நேசம், நாய்களுக்கு நீண்ட காலங்களுக்குப் போதுமானதாய இருக்கின்றன.

அற்புதரின் பிரதேசங்களில் வலம் வரும் எந்த நாயும் அங்கே வருபவர்களின் தீண்டலுக்கோ செல்லம் கொஞ்சுதலுக்க ஏங்குவதில்லை. தங்கள் பார்வையாலும் பரிவாலும் அவை ஒருவிதப்பாதுகாப்புணர்ச்சியை மட்டும் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.

காசியில் நாய்கள் குலைப்பதில்லை என்றொரு நம்பிக்கை உண்டு. அற்புதரின் பிரதேசத்தில் அவை குலைப்பதேயில்லை. ஓரிரு நாய்கள அற்புதரின் பிரதேசத்தை அசந்தர்ப்பமாய் நீங்கி புதிய இடத்தின் தாக்கத்தில குலைத்து தங்கள் குரைப்பில் தாமே மிரண்டு மீண்டும் அற்புதரின் பிரதேசம் நோக்க ஓடோடி வந்ததுண்டு.

கண்களில் நன்றிகாட்டும் உயிர்களுக்குள் அற்புதரின் கருணை பெருமளவ நிரம்பும் என்பதற்கு சாட்சி சொல்ல அவரின் எல்லையில் வளரவந் நாய்களே சாட்சி.

அற்புதரின் அற்புதத்தில் அடுத்த கட்டப் பரிமாணம் என்ன தெரியுமா? அவருடைய எல்லைக்குள் நாய்வேடத்தில் வந்த நரிகளுக்கும் அவர் நாயின் தன்மையைத் தந்தருளினார். நரிகளின் இயல்பில் நிரம்பியிருந்த வஞ்சத்தை உருவிவிட்டு அதற்கு மாற்றாய் நன்றியுணர்வை வைத்த மாத்திரத்தில் நரிகளும் நாய்களாயின.

காலம் நகர்வதை நொடிநொடியாய் அவதனிக்கும் காரணத்தாலேய ஆழ்ந்த உறக்கத்தில் கூட சிறு சலனத்தில் விழித்த்கெழும் வல்லமை நாய்களுக்கு உண்டு. அவற்றின் விடைத்த காதுகளில் காலத்தின் ஓசைகள் கேட்டுக் கொண்டேயிருக்கின்றன. நாய்கள் காலபைரவரின வாகனமாய் அமையக் காரணம் இதுதான்” என்றார் அற்புதர்.

காலபைரவர்

“அட்டஹாச பின்ன பத்ம சண்ட கோச சந்ததிம்.
திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்.

அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *