வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

கஞ்சிமட்டுமல்ல. கனவுகள் கூட ஆறிப்போனால் பழயவைதான். பசித்த வயிறு பழங்கஞ்சியை உண்ணவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும். அதே போல்தான் ஆறிப் போன கனவுகளை கைப்பற்றவும் முடியாமல் கைவிடவும் இயலாமல் இதயங்கள் பதறும்.

பழைய கனவுகள், எட்டப்படாத இலட்சியங்கள் நம் சாதனைத் தினவுக்கு சவால் விட்டுக்கொண்டே இருக்கும்.

அன்றாடக் கடமைகள், அடுப்புக்கு விறகு சேகரிக்கும் அவசரத் தேவைகள் என்று பலவற்றுக்கும் மத்தியில் கனவுகளை ஆறிவிடுபவர்கள் காலம் போனபிறகு கண்ணாடி பார்த்து சபித்துக் கொள்வார்கள்.

ஒரு கனவை, ஓர் இலக்கை, எட்டி முடித்தவர்கள் அந்த உற்சாகத்துடன் அடுத்தொரு கனவை நோக்கிக் களமிறங்குவார்கள். புதிய வெற்றிகள் நோக்கிப் புறப்படுவார்கள்.

ஓர் இலட்சியத்தை எட்டி முடித்தவனுக்கு காலம் கொடுக்கும் மிகப் பெரிய பரிசு என்ன தெரியுமா? இன்னொரு புதிய இலட்சியமும், அதனை எட்டுவதற்கான சக்தியும்தான்!

எனவே கனவுகளை சுடச்சுட கைப்பற்றுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *