வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

திறமையாளர்களில் தொடங்கி உறவினர்கள் வரை, பணியாளர்களில் தொடங்கி பழகுபவர்கள் வரை, எல்லோரையும் பயன்படும் பொருளாக மட்டுமே பார்க்கிற பழக்கம் பெருகி வருகிறது.

ஒரு மனிதனுடைய வாழ்வில் விலைமதிக்கவே முடியாத முதலீடும், அசையாச் சொத்தும், அவன் உருவாக்கி வைக்கக் கூடிய உறவுகள் மட்டுமே.

உங்கள் வங்கி கணக்கை, நிலத்தின் மதிப்பை நகைகளின் எடையை கணக்கிட்டு விட முடியும். ஆனால் நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் உறவுகள், எந்த நேரத்திலும் எந்த உதவியை எப்படி செய்யும் என்பதை யாராலும் அளவிட முடியாது.

பல இலட்சம் ரூபாய்கள் செலவு செய்து நிறைவேற்றமுடியாத காரியத்தை நிறைந்த அன்பால், நட்பால் சில சமயம் நிறைவேற்றிவிட முடியும்.

நாம் சிலரிடமோ, நம்மிடம் சிலரோ வணிக ரீதியாகவே பழகினால் கூட அவர்களை முக்கியமான மனிதர்களாய் மதிப்பதே உறவுகளை பலப்படுத்தும்.

மனிதர்கள் நமக்கு ஆதாயம் கொடுக்கவே உருவாக்கப்பட்ட தசைப்பிண்டங்கள் என்றும் இதயம் என்பது அவர்களுக்கு இலவச இணைப்பென்றும் எண்ணுவது உறவுகளை ஒரு போதும் பலப்படுத்தாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *