வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

ஒரு வயதில் உடம்பு உங்களுக்கு எஜமானன். இன்னொரு வயதில் அதுவே உங்களுக்கு அடிமை. இளமையின் விளிம்பில் இருக்கும் வரை எஜமானராய் உடம்பு இருந்தால் உங்கள் பிடி நழுவுவதாக அர்த்தம்.

இளமையிலேயே உடம்பை உங்கள் பிடிக்குக் கொண்டு வந்துவிட்டால் நீங்கள் போடும் ஆணைக்கு உடம்பு கட்டுப்படும்.

இளமையிலேயே யோகப் பயிற்சி உடற்பயிற்சி தியானப் பயிற்சி உணவுக் கட்டுப்பாடு, வேண்டாத பழக்கங்களிலிருந்து விலகி நிற்பது என்பன போன்றகுணங்கள் உங்களை எப்போதும் எஜமானனாகவே வைத்திருக்கும்.

உடம்பின் அருமையை உணர்ந்தால் உடம்பு அடிமையாய் இருக்கும் என்பதால்தான் மகாகவி பாரதி. “உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்” கேட்பான்.

ஐந்திலேயே வளைக்க வேண்டும் என்பதால்தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். ஒவ்வொரு தடவை உடம்பை வளைக்-கும் போது, உடம்பு போடும் எல்லைகளையும் நிபந்தனைகளையும் நீங்கள் கடந்து போகிறீர்கள்.

வாழ்க்கை என்பது பயணம் எனில்
உடம்பே வாகனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *