ஓஷோ உணர்த்தும் கண்ணன்-இன்னும் சில குறிப்புகள்

பாரதியும் ஓஷோவும் ஒத்துப் போகிற இடங்கள் என்கிற சிறிய பகுதி மட்டுமே இந்த நூலில் சிந்திக்கப்பட்டிருக்கிறது. அதைக் கடந்து முற்றிலும் அபூர்வமான கண்ணோட்டத்தில் பல தகவல்கள் கொண்டு திகழ்கிறது. “Krishna-the man and his pholosophy”.

அதன் விஸ்தீரணம் பற்றி நாம் விளங்கிக் கொள்ளும் விதமாக சில தகவல்களைப் பார்க்கலாம்.

ராமன், கண்ணன் எல்லாம் விஷ்ணுவின் அவதாரம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என்ற கேள்வி ஓஷோவிடம் கேட்கப்படுகிறது.

ஓஷோவின் பதில் இதோ:

விஷ்ணு என்பது ஒரு சக்தி நிலை. நதி ஓடுகிறது என்றால் விஷ்ணு ஓடுவதாகப் பொருள். அந்த வகையில் பார்த்தால் அத்தனை உயிர்களுமே விஷ்ணுவின் அவதாரங்கள்தான்.

ராமன் கண்ணன் மட்டுமல்ல. ராவணன்கூட விஷ்ணுவின் அவதாரம்தான். ஆனால் திசை மாறிச் சென்ற அவதாரம் என்கிறார் ஓஷோ.Ravana was also Vishnu, but he is deviated vishnu என்பது அவருடைய விளக்கம்-.

காலங்களில் நான் வசந்தமாயிருக்கிறேன், யானைகளில் நான் ஐராவதமாயிருக்கிறேன் பசுக்களில் காமதேனுவாயிருக்கிறேன் என்றெல்லாம் பகவத் கீதையின் பத்தாவது அத்தியாயத்தில் கண்ணன் சொல்கிறான். அப்படியானால் தாழ்ந்தவை எதையும் தானென்று ஒப்புக் கொள்ளக் கண்ணன் தயாரில்லையா என்றொரு கேள்வி கேட்கப்படுகிறது.

ஓஷோ இதற்கும் விளக்கமளிக்கிறார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இருப்பதிலேயே சிறப்புடையதெல்லாம்தான் என்று கண்ணன் சொல்வதாய்த் தோன்றும். ஆனால் இதில் ஒரு மகத்தான செய்தி அடங்கியிருக்கிறது.

‘யானைகளில் நான் ஐராவதம்’ என்று கண்ணன் சொல்கிறபோது ஒவ்வொரு யானையுமே ஐராவதமாக உயரும் தகுதிகளோடுதான் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உயிர்கள் தங்களை உணராமல் சராசரி நிலையிலிருந்தே முடிந்துவிடுகின்றன. தான், படைப்பின் உச்சத்தைத் தொட்டிருப்பதையே கண்ணன் உணர்த்துகிறான் என்கிறார் ஓஷோ.

Krishna says only one thing. That he is the culmination. the perfection of nature in everything. Whoever and whatever attains to the subline reflects Godlines.

 

மரபின் மைந்தன் ம.முத்தையா

(எட்டயபுரமும் ஓஷோபுரமும் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *