வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

கைக்குக் கிட்டிய இரும்பு மரத்துண்டு, கம்பிகள் ஆகியவற்றைக் கொண்டு இசைக்கருவி செய்த இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை ஒன்றுண்டு.

குப்பைகளில் கிடந்தவற்றை வைத்து இசைக்கருவி செய்தான் அந்த இளைஞன் என்பதுதான் செய்தியின் சாரம்.

ஆனால் சுகமான இசை தரும் நல்ல நல்ல வீணைகளை நலங்கெடப் புழுதியில் எறிவதுபோல் பல நல்ல விஷயங்களை நாம் தொலைத்திருப்போம்.

உடல் நலம், சிறந்த உறவுகள், நல்லவர் நட்பு, என்று பலவற்றை அஜாக்கிரதையால் தொலைந்திருந்தால், விழித்துக் கொள்ள இதுவே நேரம்.

வீசியவற்றைதேடி எடுக்க வாழ்க்கை வழங்கும் வாய்ப்புகளை அகங்காரத்தாலோ, அலட்சியத்தாலோ தவறிவிடக் கூடாது.

சின்ன மனத்தாங்கலில் சிறந்த நண்பர்களையோ உறவினர்களையோ பகைத்துக் கொண்டிருந்தால் அவர்களிடம் வலியச் சென்று பேசி, சரி செய்து கொள்ளலாம்.

சோம்பேறித்தனத்தால் உடல் பயிற்சியைச் கைவிட்டிருந்தால், உடனே தொடங்கலாம். இதயத்தில் பெருகும் இனிய இசைக்கு ஈடேது? இணையேது?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *