நீ…விட்டுச் சென்ற கவிதை நோட்டின்

வெள்ளைப் பக்கங்கள் – என்
வாழ்க்கைக்குள்ளே அடிக்கடி நேரும்
மௌன யுத்தங்கள்

நீ…தொட்டுத் தந்த காகிதத்தில்
என்னென்ன வாசங்கள் – அன்று
தோன்றும் போதே கனவாய் புகையாய்த்
தொலைந்த நேசங்கள்

சிப்பிக்குள்ளரு முத்தைப் போல
சிநேகம் கொண்டோமே – காலம்
தப்பிய பின்னால் திறந்து பார்த்துத்
தள்ளிச் சென்றோமே!
ஒப்புக்காக விடைபெற்றோமே
உள்ளம் கேட்கிறதா – அடி!
சிற்பம் போன்ற நினைவுகளை மனம்
காவல் காக்கிறதா!

எழுதப்படாத பக்கங்கள் இதிலே
ஏகம் இருக்கிறது
என்றால் கூட ஒவ்வொன்றிலும் என்
இதயம் இருக்கிறது!

பழைய ஞாபகத் துளிகள் வந்தென்
பார்வை மறைக்கிறது – எந்தப்
பாதையிலாவது நீ வருவாய் எனப்
பயணம் தொடர்கிறது!

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *