வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

படிப்பறிவு என்பது அடுத்தவர்கள் எழுதி வைத்த அனுபவங்களை எடைபோட உதவும். பட்டறிவு என்பதோ உங்கள் சொந்த அனுபவங்களைப் புடம்போட உதவும்.

பழைய காலங்களில் ஒருவருக்கு சந்நியாசம் தரும் முன் காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை தீர்த்த யாத்திரை போகச் சொன்னதன் நோக்கமே வாழ்க்கை அனுபவங்களை விரிவாக்கிக் கொள்ளத்தான்.

ஓரளவு சாதித்த பிறகு பெரும்பாலானவர்கள் தங்களை மற்றவர்களிடமிருந்து துண்டித்துக் கொள்கிறார்கள்.

கால்கள் முளைத்த தீவாக நடமாடுவதன் மூலம் ஒரு மனிதன் தன் உலகத்தைத்தானே சுருக்கிக் கொள்கிறான்.

சாதித்திருந்தாலும், சலிப்பாக, சிரிப்பே இல்லாமல் வெறுப்பாக சிலர் நடமாடுவதன் காரணம் இதுதான்.

மிக எளிய மனிதர்கள் கூட வாழ்வின் மிக உயர்ந்த பாடங்களை உணர்த்தி வருகின்றார்கள். அவர்களை சந்தித்தால் உலக ஞானத்தை சந்திக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *