Entries by Editor

சாகித்ய அகாதமி-ஆளுக்கா?நூலுக்கா?

ஆ.மாதவன் தமிழில் முக்கியமான படைப்பாளி. அவருக்கு தரப்பட்டுள்ள சாகித்ய அகாதெமி விருது காலந்தாழ்ந்து தரப்பட்டுள்ளது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதேநேரம், அவருக்கு தரப்பட்டுள்ள விருது, அவருடைய விமர்சன நூல் ஒன்றுக்காக என்பதுதான் விநோதம். அந்த […]

மூடர் கூடம்

ஓராசிரியர் பள்ளியிலே ஓட்டமில்லே ஆட்டமில்லே யாராயிருந்தாலும் எப்போதும் அச்சத்திலே! சார்வாளின் இருமலிலும் சங்கீதக் கார்வையின்னு வாய்பாடு படிப்பதன்றி வேலையங்கே ஏதுமில்லே வச்சதுதான் சட்டமவர் வகுத்ததுதான் பாடமுன்னு உச்சியிலே கிறுக்கேறி ஊர்பகைக்கக் கெடந்தாலும் லச்சையெதும் இல்லாத […]

கவியரசு கண்ணதாசனின் தைப்பாவை-ஓர் அறிமுகம்-3

தமிழ்ச் சமுதாயத்தின் தொல்மரபுகளையெல்லாம் மீட்டெடுத்த களஞ்சியம் தைப்பாவை. கண்ணனைச் சொல்லும் போது “கதிர்மதியம் போல் முகத்தான்” என்றாள் ஆண்டாள். இதனை உளவாங்கிய கவிஞரோ ” எங்கள் சமுதாயம் ஏழாயிரம் ஆண்டு திங்கள் போல் வாழ்ந்து […]

கவியரசு கண்ணதாசனின் தைப்பாவை-ஒர் அறிமுகம்-2

கவியரசர் அனாயசமான ஓசையழகுடன் எழுதியுள்ள தைப்பாவையில் ஒரு காட்சி ஒழுங்கும் தானாகவே அமைந்துவிடுவதுதான் ஆச்சரியம். தைமாதம் முதல்நாளில் உழவர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை அங்கே எழும் ஓசைகள் வழியே உணர்த்துகிறார் கவிஞர். காளை மணியோசை […]

கவியரசு கண்ணதாசனின் தைப்பாவை-ஒர் அறிமுகம்-1

கவியரசு கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்த வேளையில் எழுதிய நூல் தைப்பாவை. சமயப்பற்றுள்ள குடும்பத்தில் பிறப்பு,சமய நூல்களில் லயிப்பு ஆகியன அவரிடம் திருப்பாவை,திருவெம்பாவை ஆகிய நூல்களைக் கொண்டு சேர்த்திருந்தது. அவற்றின் யாப்பழகும் ஓசைச் செப்பமும் […]

மார்கழி 28 குருவாக வந்த சிவன்

மூவராலும் தேவராலும் அறிய முடியாத சிவபெருமான் தன் பாகம்பிரியாளோடு தன்னடியார்களின் மன வீடுகளில் தொடர்ந்து எழுந்தருள்கிறார். இந்த எளிவந்த தன்மையைப் பாடும் போதே சிவபெருமான் குருவடிவாய் திருமேனி கொண்டு வந்ததையும் ,திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்டதையும்,குருவடிவு […]

மார்கழி 27_கருணைக்கென்ன கைம்மாறு?

தேவர்கள் அமுதத்தை அறிந்தவர்கள். அதன் சுவையை அறிந்தவர்கள். ஆனால் அவர்கள் ஒரு பழத்தின் சுவையை அறிந்தவர்களில்லை என எள்ளல் தொனிபடப் பாடுகிறார் மாணிக்கவாசகர். எந்தப் பழம் அது? திருமூலர் சொன்ன பழம்தான். ”ஒன்று கண்டீர் […]

மார்கழி 26-தேடலின் உறுதி

தேர்வில் வெல்ல விரும்பும் மாணவர்களைப் பாருங்கள்.பொழுது போக்குகள்,கேளிக்கைகள் எதிலும் ஈடுபடாமல் படிப்பிலேயே கவனமாயிருப்பார்கள். இவர்களே இப்படியென்றால் முக்தியை நினைக்கும் அடியார்கள் எப்படி இருப்பார்கள்? “பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்” என்கிறார் மாணிக்கவாசகர். “பப்பற” […]

மார்கழி 25-தகுதி வேண்டாத பதவி

சிற்சில பதவிகளுக்கென்று சில தகுதிகள் உண்டு.ஆனால் முன் தகுதி எதுவுமே இன்றி இருந்தாலும் பக்தி இருந்தால் இறைவனுடைய கருணை ஆட்கொண்டு விடுகிறது.”சிவன் பஞ்ச பூதங்களிலும் நிறைந்து நிற்கிறான்.அவன் எங்கும் இருப்பவன் என்பதால் செல்வதோ வருவதோ […]