Entries by Editor

மார்கழி 24-சிறியவராய் உணர்பவரே பெரியவர்கள்

பக்தி கனிகையில் வருகிற பணிவு, அற்புதமானது. மனிதன் ஓர் எல்லை வரையில் தான் எவ்வளவு பெரியவன் என்பதை நிறுவவே முற்படுகிறான்.ஆனால் அவன் பக்குவம் அடைகிற போது தன்னினும் மேம்பட்ட இறையடியார்கள் பலரும் இருப்பதைக் கண்டு […]

மார்கழி 23-எல்லோருக்கும் அரியன்! எமக்கெளியன்!

இந்தப் பாடலுக்கான மரபான உரைகளில் ஒன்று, பக்தியின் பரிணாமத்தை சுட்டுவதை பள்ளி மாணவனாக இருந்த போது வாசித்தேன். மகாவித்வான் தண்டபாணி தேசிகரின் உரை அது. “கூவின பூங்குயில்” என்று பாடல்தொடங்குகிறது.பொழுது புலர்வதற்கு முன் கூவக் […]

மார்கழி 22- கருணைக் கதிர்! கண்கள் மலர்!

சிவபெருமான் திருப்பள்ளியெழும் கோலத்தை நுணுக்கமாக விவரிக்கிறார் மாணிக்கவாசகர். ஒரு குழந்தை பிற நாட்களில் துயில் எழுவதற்கும் தன் பிறந்த நாளில் துயில் எழுவதற்கும் வேற்றுமை உண்டு. கண்களைத் திறக்கும் முன்னரே அந்தநாளைக்குறித்த உவகைச் சித்திரங்கள் […]

மார்கழி 21- திருப்பள்ளியெழுச்சி

சிவபெருமானுக்கு மாணிக்கவாசகர் பாடும் திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவையின் இணைப்பதிகமாக காணப்படுகிறது. வாழ்வின் மூல முதலே சிவன் எனும் பொருளில் “போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே” என்று தொடங்குகிறார்.உயிரின் சிறப்பே அதற்குள் இருக்கும் இறைத்தன்மை. தனக்குள் இருக்கும் […]

மார்கழி18 ஒளி பெருக உயிர் பெருகும்

மூட இருள் மூடிய உயிர் பேதங்கள் வகுக்கிறது. பூமியை விண்ணை பெண்ணை ஆணை அலியை வெவ்வேறாய் பார்க்கிறது.ஆனால் இறையருள் என்னும் ஒளி பரவும் போது படைப்பென்னும் அற்புதத்தில் அனைத்துமே அங்கங்கள் என்னும் தெளிவு பிறக்கிறது. […]

தருவாயா….

ஒளியின் ஸ்வரங்கள் ஒலிக்கிற நேரம் வெளிச்சத் தந்தியில் விரல்தொடுவாயா? களியின் மயக்கம்  கவிதரும் நேரம் குயிலே குயிலே குரல்தருவாயா வெளிச்சம் இசையாய் வருகிற நேரம் வந்துன் அழகால் நிறம் தருவாயா கிளிகள் கொத்தும் கனியின் […]