ஒரு சொல்

October 22, 2014 0

ஒருசொல் சொன்னது வானம்- அதன் ஒவ்வோர் எழுத்திலும் ஒவ்வொரு விடுகதை ஒருசொல் இசைத்தது கானம்- அதன் ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஒவ்வொரு பழங்கதை ஒருசொல் உரைத்தது ஞானம்-அதன் ஒவ்வோர் இடுக்கிலும் மௌனத்தின் வினாவிடை ஒருசொல் உரைத்தது…

பால்வெளி விரித்த படுக்கையின் விரிப்பில் நூறு சுருக்கங்கள் நீவி நிமிர்கையில் காலப் போர்வையைக் கைகளில் மடிக்கும் காதல் பெருக நின்றிருந்தாய் நீ… நிகழ்கணம் மீது நித்திரை கொண்ட என் இதழ்களில் ஏதோ எழுத வந்தவள்…

வெள்ளிச் செதில்கள் மின்னும் ஒருகயல் வெள்ளப் பெருக்கில் திரிகிறது துள்ளும் நதியின் அலைகள் நடுவே தூண்டில் எங்கோ தெரிகிறது கொள்ளை அழகில் மின்னும் பனியில் கொஞ்சும் ஈரம் உலர்கிறது வெள்ளைப் பனியை விசாரிக்கத்தான் வெய்யில்…

வெற்றிக்குத் திருவடிவம் சக்தி-அவள் வீறுகொண்டு வருகின்ற கோலம் முற்றிநிற்கும் அசுரகுணம் வீழும்-ஓம் முந்திவரும் தந்ததிமி தாளம் பற்றுகளை வெட்டிவிடும் சூலம்-அவள் பொறுப்பதில்லை பக்தரது ஓலம் நெற்றிக்கு நடுவிலொளிர் நீலம்-அவள் நிறம்தானே அனைத்துக்கும் மூலம் தாமதங்கள் …

வியாச மனம் முதல் அத்தியாயத்தில் கைகேயி பற்றிய குறிப்பொன்று தந்திருப்பேன்.முற்றாக முழுதாக விதியின் கருவியாக மட்டுமே இருந்து தன்னிலையில் இருந்து தாழ்ந்து போகும் பாத்திரங்கள் வாசகனின் புரிதலுக்குள் சில சலுகைகளைப் பெறுகின்றன.இராமன் மீது அளவிடற்கரிய…

ஒருபெண்ணைச் சொல்லும் போதோ  உன்னைத்தான் உவமை சொல்வார்  வரும்பொருள் எல்லாம் உந்தன்      விழிபடும்    மகிமை என்பார்  கருநிறம் கொண்ட மாலின்      கமலத்து மார்பில் நின்றாய்   திருவெனும் தேவி உந்தன்     திருவடி சரணம்…

கலங்கரை விளக்கம் எங்கே?       கல்வியின் கனிவு எங்கே? உலகுக்குத் தமிழர் மேன்மை உயர்த்திய செம்மல் எங்கே? குலவிடும் காந்தீயத்தின்       குன்றத்து தீபம் எங்கே? மலையென நிமிர்ந்த எங்கள் மகாலிங்க வள்ளல் எங்கே?…

விசித்திர வீரியனை உற்சாகம் மிக்கவனாய் நோயின் தீவிரம் தொட முடியாத தொலைவில் நிற்பவனாய் முதற்கனல் சித்தரித்தாலும் அவன் உண்மையின் தீவிரமும் உணர்ச்சியின் தீவிரமும் ஆட்கொள்ளப்பட்டவன் என்று இரண்டு முக்கிய இடங்கள் நிறுவுகின்றன. அம்பைக்கு இழக்கப்பட்ட…

மலையரசி மாதங்கி மாதரசி அருளாலே மலைநாடு தனில்வந்து சேர்ந்தேன் கலையரசி வெண்கமலக் கவியரசி திருநாளில் கைகூப்பி அவள்பாதம் வீழ்ந்தேன் உலையரிசி தனில்தொடங்கி உயர்வரசு வரைவழங்கும் திருவரசி பதமலரில் தோய்ந்தேன் நிலையரசு தேவியரின் அருளரசு என்பதனால்…

 ஒருநூறு கதைபேசும் கண்கள்-உன் ஒளியிதழில் உருவாகும் பண்கள் கருவாகும் முன்பேநான் கண்டேன்-உனைக் காணத்தான் பலபிறவி கொண்டேன் செங்கமலம் போல்நான்கு கரங்கள்-அவை சிந்துகிற எல்லாமே வரங்கள் தங்கமுகம் பார்த்தாலே போதும்-எனத் தவமிருக்கும் ஒருநான்கு வேதம் கடவூரின்…