சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் விஜயதசமி பூஜை.அவர் வைதீக மரபில் வந்தவர். அவருடைய குடும்பத்தினரும் அவருடைய சகோதரர் குடும்பத்தினருமாக வந்து பூஜை ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர். இரண்டு…

திசையெங்கும் பொன்னொளிரத் திறந்ததொரு கதவு அசைவின்மை எனும்நதியில் அசைந்ததொரு படகு கசிகின்ற கண்ணிரண்டும் கங்கைநதி மதகு இசைதாண்டும் மௌனத்தில் எழுந்தசுக அதிர்வு பாறையின்மேல் பூவொன்று பூத்ததிந்த தருணம் மாறாத ஞானத்தின் மூலம்மேல் கவனம் கீறாமல்…

மற்ற காவியங்கள் போலன்றி,மகாபாரதம் மறுபடி மறுபடி எழுதப்படுகிறது.காலச்சூழலின் கண்ணாடியாய்,உச்சம் தொடும் படைப்பு மனங்களின் உண்டியலாய்,மகாபாரதம் திகழ்வதாலேயே யுகந்தோறும் அதில் அபூர்வ பிம்பங்கள் பிரதிபலிக்கின்றன.அழகிய மணிகள் சேகரமாகின்றன. நடந்து முடிந்த சம்பவங்களை ஒழுங்கமைக்கும் மேதைமை,அவற்றிலிருந்து நிலையான…

கருவியும் புதிது-உன் குறுநகை புதிது கைகளின் வித்தை புதிது அருவியைப்போல வருகிற ஸ்வரங்கள் அத்தனை அத்தனை புதிது திருமலை நாதன் பெயரொடு வந்து தந்தசங் கீதம் புதிது ஒருவரும் நினையாப் பொழுதினில் மறைந்தாய் காலனுக்கேது…

நிறைந்து கிடக்கிற பத்தாயத்தில் வழிந்து கொண்டிருக்கிற தானியம்நடுவே தன்பெயர் பொறித்த கார்நெல் தேடி சின்னக் குருவி சமன்குலைக்கிறது. பெயர்கள் பொறிக்கும் அவசரத்தில் குருவியின் பெயர் விட்டுப் போனதாய் கைகள் பிசையும் நான்முகனுக்கு செய்வதேதெனத் தெரியவேயில்லை…

எவரோ நீட்டும் கரம்பார்த்தும் என்கரம் பற்றிச் சிரிக்கின்றீர் தவமே அன்பாய் ஆனதனால் தானாய் மகானாய் இருக்கின்றீர் தவறோ சரியோ எனக்கேட்டால் தவறும் சரியும் ஒன்றென்பீர் திவலை நீர்த்துளி பட்டாலும் தேன்குளம் என்றே கொள்கின்றீர் வண்ண…

சென்னை அம்பத்தூர் கம்பன் கழகத்தில் “கம்பனில் தவம்”என்று பேசவும்,அவர்கள் அன்புடன் வழங்கும் “தமிழ்ச்சுடர்” விருது பெறவும் வருகிறேன்.24.08.2014 ஞாயிறு மாலை 6.15 மணி திருமால் திருமண மண்டபம் அம்பத்தூர் சென்னை. வாய்ப்பிருப்போர் வருகை புரிய…

அங்கே நிற்கிறாள் அந்தச் சிறுமி அடமாய் அடம்பிடித்து “இங்கே வாயேன்”என்றே திசைகள் எல்லாம் குரல்கொடுத்து எங்கே என்ன நடக்கிற தென்றே எல்லாம் அறிந்தவளாம் பொங்கும் குறும்பை மறைத்தபடி ஒரு மூலையில் ஒளிந்தவளாம் பத்துக் கைகள்…

பந்தயச் சாலை முழுவதும் பார்த்தால் பச்சைப் பிள்ளையாய் இருந்தது முந்தானை கொண்டு பாரத மாதா மூடி அணைத்தது தெரிந்தது வந்தவர் போனவர் கண்களில் எல்லாம் வியப்பின் கண்ணீர் நிறைந்தது “வந்தே மாதரம்” வந்தே மாதரம்”…

பிறந்ததினம் என்பதொரு நினைவூட்டல்தான் பிறந்தபயன் என்னவென்று தேடச் சொல்லும் பிறந்ததினம் என்பதுமே உணர்வூட்டல்தான் பிரியமுள்ள இதயங்கள் வாழ்த்துச் சொல்லும் திறந்தமனம் கொண்டவர்கள் நல்கும் வாழ்த்து தினம்புதிதாய் கனவுகளை வளர்க்கச் செய்யும் சிறந்தபல இலக்குகளை வகுக்கச்…