வாராய் வாராய்              மஹாசக்தி…! பூக்கள் இன்றைக்கு மலருகையில்-உன் பொற்பதம் சேர்ந்திடத் தவித்திருக்கும் தேக்கிய தேன்துளி யாவினிலும்-அந்த தெய்வக் கனவு தெறித்திருக்கும் பாக்கியம் செய்தோம் பராசக்தி-உன் பொன்நவ ராத்திரி தொடங்கியது ஏக்கம் அச்சம் சோர்வெல்லாம்-அட…

இந்தக் கேள்வி திருவில்லிப்புதூரில் கூடியிருந்த எல்லோருக்கும் ஒருநாள் எழுந்தது. அப்போது வைகோ சிவகாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். திருவில்லிப்புதூர் திருமால் திருக்கோவில் குடமுழுக்கு (சம்ப்ரோக்ஷணம்) விழாவுக்காக,வருகை தந்திருந்தார் வைகோ. அவருடைய தோள்களைத் தழுவிக் கொண்டு முழங்கால்…

 அபிராமியும்…. அபிராமி பட்டரும்….. அர்ச்சகர் மரபில் வந்தவன்தான் -அன்னை ஆட்கொள்ளப் போவதை அறியவில்லை பிச்சியின் பக்தியில் பித்தேறி -வந்த போதை சிறிதும் தெளியவில்லை உச்சி வரையில் ஜோதியொன்று-விசை உந்திச் சென்றதில் சுருண்டுவிட்டான் நிர்ச்சல நிஷ்டையில்…

கவிஞர் வைரமுத்து நேற்று மாலை கோவைக்கு வந்தார்.அவருக்கு மிகவும் பிடித்தமான ஊர்களில் கோவையும் ஒன்று. இன்று காலை ஹோட்டல் விஜய் பார்க் இன் என்னும் புதிய மூன்று நட்சத்திர விடுதியைத் திறந்து வைக்கிறார். அதன் உரிமையாளர் திரு. கோவை இரமேஷ், கவிஞருக்கு…

அற்புதர்-6

October 13, 2012 0

அற்புதரின் கைப்பையில் சில பாம்புக் குட்டிகள் இருக்கும். புற்றில் இருக்கும் பாதுகாப்புணர்வைக் காட்டிலும் அங்கேதான் பலமடங்கு பத்திரமாய் உணரும். அற்புதருக்கு பாம்புகளுடன் அறிமுகம் உண்டு.அவரை பாம்புகளுக்கு அற்புதராய்த் தெரியுமோ என்னவோ அவரின் அற்புதங்களை அவையறியும்.…

அற்புதர்-5

October 11, 2012 0

அற்புதரின் பார்வை நிகழ்காலத்துடன் நின்று விடுவதல்ல. அது பின்னர் நிகழக்கூடியதையும் சேர்த்தே தரிசிக்கும் தன்மை வாய்ந்தது. அற்புதர்கள் எல்லோருமே இப்படித்தான் போலும்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஒற்றை மனிதன் கூட இல்லாத பொட்டல் வெளியைப் பா ர்த்த…

அந்த மலையடிவாரத்தில் அற்புதர் உலவிக்கொண்டிருந்த போது சற்று முன்னதாய் இருவர் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். ஜனன தேவதையும் மரண தேவதையும்தான் அவர்கள் என்பதைக் கண்டுணர அவருக்கு அதிகநேரம் ஆகவில்லை.இருவர் கைகளிலும் சிறு சிறு மூட்டைகள்.அந்த மூட்டைகளை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று  அற்புதர்…

அற்புதரின் நிரல்கள் அசாதாரணமானவை. கடிகாரத்தில் துள்ளிக்கொண்டிருக்கும் விநாடி முள்ளின் வீரியத்தைக் கணக்கிலிட்டு வடிவமைக்கப்பட்ட நிரல்கள் அவை.ஏனெனில் அற்புதரின் அகராதியைப் பொறுத்தவரை எப்போதோ நிகழ்வதல்ல அற்புதம். ஒவ்வொரு கணமும் நிகழ்வதே அற்புதம். நிகழும் ஒவ்வொரு கணமுமே…

மூத்த தமிழறிஞரும் காந்தீய நெறியாளருமான முனைவர் .ம.ரா.போ. குருசாமி (92) இன்று கோவையில் காலமானார். தமிழிலக்கிய உலகில் நுண்ணிய அறிஞராகவும் தேர்ந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்தவர் இவர். செவ்விலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் சமகால இலக்கியங்களில் வியப்பூட்டும் வாசிப்பும் கொண்டவர் அவர். ஜெயமோகனின் “இன்றைய காந்தி” நூலுக்கு விருது வாங்கித்தர தாமாகவே கங்கணம் கட்டிக் கொண்டு அதற்கான விண்ணப்பங்களை சிரத்தையுடன்…

அற்புதருக்கு நாய்க்குட்டிகளைப் பிடிக்கும். அல்ல அல்ல.. அற்புதருக்கு நாய்க்குட்டிகளையும் பிடிக்கும். ஆனால் அவர் அற்புதராயிருப்பதன் முக்கியக் காரணங்களில் ஒன்று, நாய்க்குட்டிகளுக்கும் அவரைப் பிடிக்கும் என்பதே பலநேரங்களில் அற்புதரின் வாகனக் கதவுகளை திறக்கும்போதெல்லாம் வெண்பந்துபோல் ஒரு…