“அவள் ஒரு தொடர்கதை”திரைப்படத்தின் கதாசிரியர் திரு.எம்.எஸ்.பெருமாள். அமரர் சுகி.சுப்பிரமணியன் அவர்களின் புதல்வர்.திரு.சுகி.சிவம் அவர்களின் மூத்த சகோதரர். சென்னை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், வெவ்வேறு மாநிலங்களில் நிலைய இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த…

கவியரசர் கண்ணதாசன் மறைந்து சிலநாட்களுக்குப் பின், ஒரு கச்சேரிக்கான விமர்சனத்தில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கலை விமர்சகர் சுப்புடு. “கண்ணதாசனை தமிழில் புதிய சாகித்யங்கள் நிறைய எழுதுமாறு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்து தருவதாக…

“எட்டாம் வகுப்புவரை எட்டத்தான் என்பெற்றோர் விட்டார் பின்னென்னை ஏழ்மையிலே விட்டார்” என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஆனாலும் இலக்கண அறிவில் அவர் யாருக்கும் சளைத்தவரில்லை. வெண்பா தவிர மற்ற வடிவங்களில் எல்லாம் விளையாடியிருக்கிறார். குறிப்பாக அறுசீர்…

கண்ணதாசனின் கவித்துவம் கனல்வதற்கு முக்கியக் காரணம், வார்த்தைகள் வந்து விழும் அனாயசம். இந்த அனாயசத்தையும் எளிமையையும் விளக்க முடியாமல் இன்று பலரும் திணறுகிறோம். கண்ணதாசன் பாடல்களில் எளிமையாக வந்து விழும் வார்த்தைகளுக்குள் நூல்பிடித்துக் கொண்டே…

கண்ணதாசனின் தைப்பாவை பல விதங்களிலும் வித்தியாசமான முயற்சி. திருப்பாவையிலும் திருவெம்பாவையிலும் பேசப்படும் பாவை நோன்புக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தைமாதத்தையே ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி “தையாகிய பாவையே” என்று ஒவ்வொரு பாடலிலும் அழைக்கும் விதமாகத்தான்  தைப்பாவை அமைந்திருக்கிறது.  …

திருப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன் ,சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் தேர்தல் அறிக்கைகள் அடங்கிய பிரசுரம் வெளியிடப்பட்டது. அதிலிருந்த வாக்குறுதிகளில் ஒன்றிரண்டு…. 1.ஏற்றுமதிக்கு வசதியாக திருப்பூருக்குக் கடலைக் கொண்டு வருவது 2.எங்கள் ஆட்சியில்…

கண்ணதாசனின் எழுத்துக்களில் இருக்கும் எளிமை,ஆபத்தான எளிமை.மேலோட்டமாகப் பார்த்தால், ஒன்றுமில்லாததுபோல் தோன்றிவிடும். ஆனால் ஆழமான விஷயங்கள்அனாயசமாய் சொல்லப்பட்டிருக்கும்.  வைணவத்தின் முக்கியமான தத்துவக்கூறு ஒன்றுண்டு. இறைவனை, ஐந்து நிலைகளில் வைத்துப் பார்க்கிறது வைணவம். பரம்பொருளாக செயல் கடந்த நிலையில் இருப்பது, பரநிலை. இருபுறமும்…

ஒருபுறம் உலக இன்பங்களைத் துய்ப்பதில் கண்ணதாசன் காட்டிய ஈடுபாடும், மறுபுறம் கண்ணனில் மூழ்கித் திளைத்த மனப்போக்கும், வாழ்க்கை அனுபவங்களை சாட்சிபூர்வமாகப் பார்க்கும் சமநிலையை அவரிடம் ஏற்படுத்தியிருந்தது. கண்ணனின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்களின்…

கண்ணன் மீதான கண்ணதாசனின் ஈடுபாடு,அவருடைய புனைபெயருக்கும் பிந்தியது. பத்திரிகை ஒன்றில் வேலை தேடிப்போன போது,”என்ன புனைபெயரில் எழுதி வருகிறீர்கள்?”என்று பத்திரிகை ஆசிரியர் கேட்டாராம்.கம்பதாசன்,வாணிதாசன் போன்ற பெயர்கள் அப்போது பிரபலமாக இருந்ததால்,சிறிது யோசித்துவிட்டு “கண்ணதாசன்”என்று சொல்லிவிட்டாராம்.பத்திரிகை ஆசிரியர் “ஆமாம் !பார்த்திருக்கிறேன்”என்று வேறு சொன்னாராம்.   அந்தக் காலங்களில் கண்ணதாசனுக்குக் கண்ணன் மீது பெரிய பக்தி இருந்ததில்லை.…