மாநிலந் தழுவிய இயக்கமொன்று கண்ணதாசன் பெயரில் உருவாக வேண்டுமென்று கனவு கண்டவர்களில்  முக்கியமானவர்,மதுரையைச் சேர்ந்த திரு.இரா.சொக்கலிங்கம்.”மனிதத் தேனீ'”என்பது இவருக்குத் தரப்பட்ட பட்டப்பெயர்.மிகவும் சுறுசுறுப்பானவர்.மதுரை கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர்.1994 என்று ஞாபகம்.திரு.தமிழருவி மணியனின் “கம்பன்…

கடைக்கோடி மனிதனின்மனசு வரைக்கும் கண்ணதாசன் ஊடுருவியிருப்பதுபோல் இன்னொரு கவிஞர் ஊடுருவியிருப்பாராஎன்பது சந்தேகமே.கண்ணதாசனின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். மனித சமூகத்திற்கு எப்போதுமே இரண்டுபேர் தேவை.ஓர் உல்லாசி.ஓர் உபதேசி.தமிழ்ச்சூழலில் இந்த இரண்டுமாக…

“ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொரு தருணத்தில் என்னுடைய பாடல் எதிரொலிக்கும்”என்றார் கவியரசு கண்ணதாசன்.தன் வாழ்வின் எல்லாத்தருணங்களிலும் கண்ணதாசனின் பாடல் ஒலிப்பதாய் உணர்ந்த பலரை நான் பார்த்திருக்கிறேன். இலக்கிய அமைப்புகள் சார்பாகக் கண்ணதாசன் விழாக்கள் நடத்துவதில்…

பீளமேடு, தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.கண்ணதாசன் பேரவையிலிருந்த பலரும் தொழிலாளர்களே.அவர்கள் வாழ்க்கைமுறை எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று.ஹாஃப் நைட்,ஃபுல் நைட் என்றெல்லாம் பலதும் சொல்வார்கள்.சிங்கை முத்து,பேரவைக்காக அறை ஒன்றைக் கொடுத்திருந்தார்.அதுவரை பைந்தமிழ் அச்சகத்தில்தான் பேரவை நண்பர்கள் கூடுவார்கள்.நான்…

கனவுகளுடன் தொடங்கப்படும் அமைப்புகள் காற்றில் கலைவதும்,காற்றில் கட்டப்படும் சீட்டுக்கட்டு மாளிகைகள் காலூன்றி எழுவதும்,புதிதல்ல.பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை தொடங்கப்பட்ட நாட்களில் எனக்கு அதன்மேல் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. முதல்காரணம்,அதற்குத் தலைவர்,உள்ளூர் அரசியல்…

வீசிய பந்தின் விசைபோலே வெய்யில் நாளின் திசைபோலே ஏசிய வார்த்தையின் வலிபோலே எழுதி முடியாக் கவிபோலே பேசிட முடியாத் தீவிரமாய் பேறுகாலத்தின் ஆத்திரமாய் ஓசை எழுப்பும் உள்மனமே உண்மைகள் தூங்கட்டும் உன்னுடனே எல்லாச் சொல்லையும்…

சித்திர மாடத்தின் மேலிருந்து-அந்தச்சீதைதன் தாய்மடி பார்த்திருந்தாள்எத்தனை நெஞ்சுரம் காகுத்தனே-உன்அத்தை மடியினில் நடந்துவந்தாய் கல்லாய்க் கிடந்த அகலிகையும்-உன்கால்துகள் பட்டதும் பெண்ணானாள்முள்ளாய் முளைத்த தாடகையும்-உன்மோதுகணை பட்டேன் மண்ணானாள்? நாத மொழிகேட்ட சபரியுமே-உனைநேர்கொண்டு பார்த்ததில் வீடுபெற்றாள்காதல் மொழிசொன்ன சூர்ப்பநகை-உன்கண்களில்…

திருவடித் தாமரை மலர்ந்தது தேன்துளி என்னுள் நிறைந்தது குருவடிவாக அருளுருவாக குளிர்மழை இங்கு பொழிந்தது-என் கொடும்வினை எல்லாம் கரைந்தது   சுடுமணல் வழியினில் தினம்நடந்தேன்-ஒரு தருநிழல் தேடியே தினம்நடந்தேன் திருமுகம் அறிந்ததும் மனம் குளிர்ந்தேன்-உன்…

கீற்று நிலாவினில் பாலினை ஊற்றிக் கிறுக்கன் தலைசுமந்தான் ஊற்றி விடுமென்ற அக்கறை இன்றி ஊர்த்துவம் ஆடுகிறான் ஈற்றினை அறியா வான்வெளியெங்கும் ஈசன் ஆடுகிறான் போற்றி யிசைக்கிற விண்மீன் திரள்களின் பாட்டினுக் காடுகிறான் நாதம் இவனது…

பைரவி வந்தாள் பைரவி வந்தாள் பத்துத் திசையதிர ஷங்கரி வந்தாள் ஷாமளை வந்தாள் எங்கள் உளம் குளிர கண்ணொரு மூன்றிலும் மின்னும் நெருப்புடன் அன்னை உருவெடுத்தாள் எண்ணிய காரியம் யாவும் நடத்திட இங்கு குடிபுகுந்தாள்…