Entries by marabin maindan

அற்புதர்-4

அந்த மலையடிவாரத்தில் அற்புதர் உலவிக்கொண்டிருந்த போது சற்று முன்னதாய் இருவர் சென்று கொண்டிருப்பதைக் கண்டார். ஜனன தேவதையும் மரண தேவதையும்தான் அவர்கள் என்பதைக் கண்டுணர அவருக்கு அதிகநேரம் ஆகவில்லை.இருவர் கைகளிலும் சிறு சிறு மூட்டைகள்.அந்த மூட்டைகளை அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று  அற்புதர் […]

அற்புதர்-3

அற்புதரின் நிரல்கள் அசாதாரணமானவை. கடிகாரத்தில் துள்ளிக்கொண்டிருக்கும் விநாடி முள்ளின் வீரியத்தைக் கணக்கிலிட்டு வடிவமைக்கப்பட்ட நிரல்கள் அவை.ஏனெனில் அற்புதரின் அகராதியைப் பொறுத்தவரை எப்போதோ நிகழ்வதல்ல அற்புதம். ஒவ்வொரு கணமும் நிகழ்வதே அற்புதம். நிகழும் ஒவ்வொரு கணமுமே […]

மூதறிஞர் ம.ரா.போ.குருசாமி மறைந்தார்

மூத்த தமிழறிஞரும் காந்தீய நெறியாளருமான முனைவர் .ம.ரா.போ. குருசாமி (92) இன்று கோவையில் காலமானார். தமிழிலக்கிய உலகில் நுண்ணிய அறிஞராகவும் தேர்ந்த திறனாய்வாளராகவும் திகழ்ந்தவர் இவர். செவ்விலக்கியங்களில் ஆழ்ந்த புலமையும் சமகால இலக்கியங்களில் வியப்பூட்டும் வாசிப்பும் கொண்டவர் அவர். ஜெயமோகனின் “இன்றைய காந்தி” நூலுக்கு விருது வாங்கித்தர தாமாகவே கங்கணம் கட்டிக் கொண்டு அதற்கான விண்ணப்பங்களை சிரத்தையுடன் […]

அற்புதர்-2

அற்புதருக்கு நாய்க்குட்டிகளைப் பிடிக்கும். அல்ல அல்ல.. அற்புதருக்கு நாய்க்குட்டிகளையும் பிடிக்கும். ஆனால் அவர் அற்புதராயிருப்பதன் முக்கியக் காரணங்களில் ஒன்று, நாய்க்குட்டிகளுக்கும் அவரைப் பிடிக்கும் என்பதே பலநேரங்களில் அற்புதரின் வாகனக் கதவுகளை திறக்கும்போதெல்லாம் வெண்பந்துபோல் ஒரு […]

அற்புதர்-1

எல்லோரின் மனவெளிகளிலும் விரிக்கப்பட்டிருந்த மானசீகக் கம்பளங்கள், அற்புதரின் பாதங்கள் பதியும் பொற்கணத்திற்காகக் காத்திருந்தன.பாதங்கள் பதியும் அந்தக் கணத்திலேயே அற்புதங்கள் நிகழுமென்ற எதிர்பார்ப்பும் சுடர்விட்டுக் கொண்டிருந்தது.வந்து சேர்ந்த அற்புதரின் பாதங்கள் பூமியின் ஸ்பரிசத்திற்குப் பழகியவை. உலகுக்குத் தர வேண்டிய வரங்கலையெல்லாம் […]

மணிகர்ணிகை

எனக்கேது தடையென்று எல்லார்க்கும் சொல்வதுபோல் கணக்கேதும் இல்லாமல் கங்குகரை காணாமல் கைகால்கள் விரித்தபடி கங்கை வருகின்றாள்: நெய்து முடியாத நீள்துகிலாய் வருகின்றாள் நிசிகாட்டும் மையிருளின் நிறம்நீங்கி, செம்பழுப்பாய் அசிகாட்டில் இருந்தவளும் ஆர்ப்பரித்து வருகின்றாள்; புடவைக்குள் […]

சித்த பீடம்

பொன்னைத் தேடிப் பொருந்தும் ஒளிபோல் உன்னைத் தேடி உன்குரு வருவார் தன்னைத் தேடித் தனக்குள் சென்றபின் இன்னும் தேட எதுவும் இல்லையே   நீண்ட கிளைகளின் நிழலுக் கடியில் மூண்ட கனல்போல் முனிவர்கள் பிள்ளை […]

உளிகள் நிறைந்த உலகமிது-4

ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.எ ழுதிய கையும் அப்படித்தான். விளம்பர எழுத்தாளராய் வாழ்வை நடத்துவது ஒருவகையில் சுகமானது. ஒற்றைப்பொறி தட்டி ஒரு கருத்துரு தோன்றிவிட்டால் நல்ல பணம். சிரமமில்லாத வேலை. பிடி […]

எதிர்த்துகிட்டு நீந்துதடி ஏடு

சொல்லாத வார்த்தைரொம்ப சூடு -அதை எல்லோரும் சுமப்பதில்லை பாரு நில்லாத ஆற்றுத்தண்ணீர் போலே-இங்கே நீளுதடி நீளுதடி வாழ்வு ஆசையின்னும் கோபமுன்னும் ஆட்டம்-இது அத்தனையும் வெத்துப்பனி மூட்டம் பேசுறதை ஒருநிமிஷம் எண்ணு-எல்லாம் மீசையோட ஒட்டிக்கிட்ட மண்ணு […]