Entries by marabin maindan

இப்படித்தான் ஆரம்பம்-30

விடுதலைப் போராட்டத்திற்குப் பிற்பட்ட காலத்தில் தேசிய உணர்வு தீபோல் பரவிய சூழல் சீன யுத்தத்தின் போதும் பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் ஏற்பட்டது. இந்த இரண்டு  தருணங்களிலும், சந்நதம்  கொண்டு  சங்கெடுத்து  முழங்கினார்  கவிஞர். தன்னுடைய கவிதைகளின்  மூன்றாம் தொகுதியை  […]

இப்படித்தான் ஆரம்பம்-29

தமிழிலக்கியத்தில் கையறு நிலைக் கவிதைகள் காலங்காலமாகவே உள்ளன. புரவலன் மறைந்த நாட்டில் நின்று கொண்டு புலவர்கள், முல்லையும் பூத்தியோ என்று கேள்வி எழுப்பினார்கள். தசரதன் மறைவு குறித்து கம்பன் எழுதிய கவிதை, எக்காலத்துக்கும் யாருக்கும் பொருத்தம் என்று […]

வீரன் சிரிக்கிற கோலம்

கற்பகச் சோலையின் வண்ணத்துப்பூச்சிமேல் கல்லை எறிகிற வேடன்-இவன் சொப்புச் சமையலில் உப்புக் குறைவென சீறி விழுகிற மூடன் அற்பத் தனங்களின் பெட்டகம் ஒன்றினை ஆக்கிச் சுமக்கிற பாலன் -இவன் செப்பும்மொழியினில் செப்பம் கொடுத்தவன் செந்தூர் நகர்வடி வேலன் கானலின் ஓட்டத்தை கங்கையின் ஊட்டமாய் […]

இப்படித்தான் ஆரம்பம் -28

ஜனநாயக சோஷலிசத்தின் தளகர்த்தராக காமராஜரைக் கண்ட கவிஞரின் கண்கள், அந்தக் கோட்பாட்டின் முதல் எதிரியாக ராஜாஜியை வரித்துக் கொண்டது. எனவே ஜனநாயக சோஷலிசத்தை வற்புறுத்திப் பாடுகிற இடங்களிலெல்லாம், கவிஞர் ராஜஜியைத் தாக்கவும் தவறவில்லை. 1965ல்  கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், இரண்டு பெண்களை ஒப்பிட்டு ஜனநாயக சோஷலிசத்தை விளக்க கவிஞர் […]

இப்படித்தான் ஆரம்பம் – 27

காமராஜர் மீது கண்ணதாசன் கொண்டிருந்த பக்தி அபாரமானது. காமராஜர் மீதிருந்த ஈர்ப்பும், திராவிட இயக்கம் மீதிருந்த வெறுப்பும் சேர்ந்து கொண்டது. கவிஞரின் பாட்டுடைத் தலைவனாய் விளங்கினார் காமராஜர். “முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி   பழனிமலை […]

இப்படித்தான் ஆரம்பம் – 26

“அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே” என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் கேட்டபோது, “நான் மாறவில்லை! என் தலைவர்கள் மாறுகிறார்கள்!” என்று சொன்னார். அவருடைய மற்ற அரசியல் அறிவிப்புகளைப்போலவே தமிழகம் இதையும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டதுதான் வருத்தமான விஷயம். தாங்கள் வகுத்த கொள்கைகளிலிருந்து தலைவர்களே முரண்படுகையில் அந்தத் […]

இப்படித்தான் ஆரம்பம்-25

ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் தெளிந்தது. உடல்நலனை ஆய்வு செய்ய மனிதனின் இரத்தமும் கருவிகளும் பயன்படுகின்றன. இந்த எச்சங்களாலும் ஒருவனைத் தக்கான், தகவிலன் […]

இப்படித்தான் ஆரம்பம் – 24

கவிஞர் கண்ணதாசனின் கவிதைகள் சுயவிமரிசனத்திலே தொடங்கி சுயதரிசனத்திலே சென்று முடிகின்றன. அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை,தன்னுணர்ச்சிப்பாடல்களே என்று பல விமர்சகர்கள் எழுதியுள்ளனர். உண்மைதான். ஆனால் அந்தத் தன்னுணர்ச்சி, வெறும் வாக்குமூலங்களாக நின்றுவிடுவதில்லை.சுய விமரிசனமாய் வளர்ந்து, சுய […]

இப்படித்தான் ஆரம்பம்-23

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்திலுள்ள ஈஷா யோக மையத்துடன் எனக்கு நெருங்கிய தொடர்புண்டு. அங்கே அமைந்திருக்கும  தியானலிங்கம், பிராணப் பிரதிஷ்டையின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.யோக மரபில் , மனித உடலில் ஏழு சக்கரங்கள் இருப்பதாகச் சொல்வார்கள். அந்த  […]