கைரேகை படிந்த கல்வழியே அறிமுகமான கவிஞர் யாழி,கவிதையின் ரேகை படிந்த தேநீர்க் கோப்பைகளுடன் வந்திருக்கிறார்.பத்துத் தலை கொண்டவன் இராவணன் என்பார்கள்.இன்று நவீன கவிதைக்கு பலநூறு முகங்கள்.யாழியின் இந்தக் கவிதைகளில் நான் காணும் முகம், மரபின்…

சக்தி ஜோதியின் கவியுலகம் முழுவதுமே பெண்ணின் அகவுலகம் சார்ந்ததுதானா எனில்,இல்லை. சங்க இலக்கிய வாசிப்பின் வழி அவர் புனைந்து கொண்ட அகவுலகம் ஒரு பகுதியெனில், நிகழ்காலத்தின் கனலாக நிற்கும் பெண்ணியம் சார் புறவுலகம் மற்றுமொரு…

ஒரு பறவையின் சிறகு துளிர்விடும் நாளுக்கு மௌன சாட்சியாய்   பஞ்ச பூதங்களும்   நிற்கின்றன. தன்னிலிருந்து உந்தியெழ ஆசீர்வதிக்கிறது பூமி. தன்னை நோக்கித் தாவ அழைக்கிறது ஆகாயம். சிறகுகளைக் கோதுகிறது காற்று. சிறகு தாழ்த்தித் தேடினால்…

  பதட்டமுறுகிற ஆண் தனக்குத் தானே புதிராய் தெரிவான்.அதுவும்,தெளிவான ஒரு பெண்ணுக்கு முன்னால் அவன் சமனப்பட முடியாமல் தடுமாறுவது பரிதாபமானதுதான்.அந்த விநாடியில் பெண்மையை,காதலை,தாய்மையை மீறி பெண்மனதில் இருக்கும் பகடை உருளத் தொடங்கிவிட்டால் அங்கே உறவுகள்…

 மெல்லிய வடிவழகும் அதனினும் மெல்லிய இயல்புகளும் கொண்டவளாய் காட்டப்படும் சங்க இலக்கியத் தலைவியரின் குரல், கனமானது. குழைவையும் கனிவையும் தாண்டிய கம்பீரம் ஒளிர்வது. இறைஞ்சுதலாய்,ஏங்குதலாய் ஒலிக்கும் அதே குரல் நுண்ணுணர்வின் உச்சப் பொழுதுகளில் காட்டும்…

                            ஐவகை நிலங்களை ஆழ உழுது பெயர்த்தெடுத்த கிழங்குகளை ஐம்பூதங்களுக்கும் படையலிடும் விதமாய் வேர்மணம் வீசும் கவிதைகள், சக்தி ஜோதியின் கவிதைகள். மண்மணம்,பண்மணம், பெண்மணம் ஆகியமூன்று சொற்களின் எல்லைகள் கடலாய் விரிய அவற்றிடையே…

கருப்பாயி என்றால் கறுப்பென்றா அர்த்தம்? கருப்பையிலே கொண்டாள் ககனம்- சிரிப்பாலே மின்னல் உருவாக்கி மேக மெனப் பொழிவாள் பின்னலிட்ட பிச்சியைப் பற்று கோடை வருங்கால் குளிர்மழையும் ஆவாளே மேடை வருங்கால் மனம்நிறைவாள் -ஜாடையில் எந்தவொரு…

(நான்கைந்து நாட்களுக்கு முன் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் அழைத்தனர். ஆதியோகியாம் சிவனின் முரண் இயல்புகளை வர்ணிக்கும் பாடலடொன்றை எழுதித் தரக் கேட்டனர். திருமதி ஜெயஶ்ரீ அவர்கள் மஹாசிவராத்திரியில் இசைத்த அந்தப் பாடல்…இதுதான்) இருளோடு…

அமெரிக்கா வாழ் அறிஞரும் ஆய்வாளருமான திரு.நா.கணேசன் திருமாலுக்கும் பழைய சோற்றுக்கும் உள்ள சிலேடைச்சிந்தனைகளை புதுப்பித்தார். சோறு என்றால் முக்தி என்றொரு பொருளும் உள்ளது நினைவுக்கு வந்தது. அந்த அடிப்படையில் இந்த வெண்பாக்களை எழுதினேன் மாவடு…