Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

எங்கே நிலவு உருவாகும்? அம்பிகையின் திருவுருவத்தை வரைந்து காட்டுகிற பாடல்கள் ஏராளம். அந்த வரிசையில் இன்னொரு பாடல் அம்பிகையினுடைய திரு முலைகளின் வர்ணனையோடு தொடங்குகிறது. செப்புப் போன்ற திருமுலைகளில் அம்பிகை சந்தனத்தைப் பூசியிருக்கிறாள். அந்தத் தோற்றத்தில் அவள் எப்படியிருக்கிறாள்? நேராக அவள் திருச்செவியை நோக்கி பட்டருடைய வர்ணனை போகிறது. கொப்பு என்பது மேலே அணிகிற தோடு, வைரக்குழை என்பது கீழே அணிவது, தரளக் கொப்பு என்றால் முத்தில் ஆன தோடு என்று அர்த்தம். அம்பிகையின் திருமுலைகளில் இருந்து ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

ஒளிரும் கலா வயிரவி அடுத்த நான்கு பாடல்களில் ஓர் அழகிய வரிசை உள்ளது. இந்தப் பாடல் பதினாறு நாமங்களைக் கொண்ட பாடல். அதற்கடுத்த பாடல் இப்போது நிலவு தோன்றப் போகிறது என்பதை குறிப்பாக அபிராமி பட்டர் உணர்த்துகிற பாடல். அதற்கடுத்து நிலவு தோன்றியதும் அவருக்குள் தோன்றுகிற களிப்பை வெளிப்படுத்துகிற பாடல். தன் பிரார்த்தனைக்கு அம்பிகை அருள் செய்யும் நேரம் வருவதை உணர்ந்து சோடச நாமங்களால் தோத்திரம் செய்கிறார் அபிராமி பட்டர். இன்னொரு சிறப்பு இந்தப் பாடலில் உண்டு. ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அந்த(க)ப் பாதையை அடைத்திடு! முதலில் அம்பிகையின் அழகை வர்ணித்தார். பிறகு தோற்றத்தை எழுதிக் காட்டினார், அதை மனதிலே குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். எப்போதுமே யாராவது ஒன்றைச் சொன்னார்கள் என்றால் அவர்களுடைய அனுபவத்தில் அதனால் என்ன நடந்தது என்று கேட்பதற்கு நமக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும். இதையெல்லாம் செய்தீர்களே, உங்களுக்கு என்ன கிடைத்தது? என்று அபிராமி பட்டர் இப்போது கேட்கிறார். அம்பிகையின் தோற்றத்தை மனதில் குறித்துக் கொண்டவுடனே இன்னொன்றும் அவருக்கு உள்ளுணர்வில் தோன்றியது. அம்பிகை என்ன விரும்புகிறாளோ ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

இனியேது பிறவி? இந்திரலோகத்தில் கேட்டதையெல்லாம் தரக் கூடிய மரம் இருக்கிறது. அதன் பெயர் கற்பக விருட்சம். அந்த கற்பக விருட்சத்தின் கீழ் ஒருவன் அது கற்பக விருட்சம் என்பது தெரியாமல் உட்கார்ந்தான். ரொம்ப களைப்பாக இருக்கிறதே இளநீர் கிடைத்தால் பரவாயில்லை என்று நினைத்தான்; இளநீர் வந்தது. இளநீரைக் குடித்தபிறகு இளநீர் போதுமா? பசியாறுவதற்கு. நல்ல அறுசுவை உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான். அறுசுவை உணவு வந்தது. சாப்பிட்ட பிறகு புழுக்கமாக இருக்கிறதே, நல்ல குளிர்ந்த ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பணிபவர் பட்டியல் அம்பிகையினுடைய பாதங்களை வழிபடுவர்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கு மென்று சொல்ல வருகிறார் பட்டர். சொல்ல வரும்போதே அம்பிகையினுடைய திருவடிகளை யாரெல்லாம் வணங்குகிறார்கள் என்பதையும் சொல்கிறார். நயனங்கள் மூன்றுடை நாதன் என்கிறார். இவனுக்கும் மூன்று நயனங்கள்; இவளுக்கும் மூன்று நயனங்கள். ஆனால் மூன்று கண்கள் உள்ளவர்களுக்கெல்லாம் அவர்தான் நாதன். எவ்வளவு பேர்களுக்கு மூன்று கண்கள் இருக்கின்றன? நம் அனைவருக்குமே இருக்கின்றன. நெற்றிக்கண் என்று நாம் சொல்வது யோக மரபிலே ஆக்ஞா என்று சொல்லக்கூடிய நெற்றிப் பொட்டில் இருக்கக்கூடிய ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

வாழ்விற்கு அவள்தான் முதலீடு ஏற்கெனவே சில பாடல்களில் அம்பிகையினுடைய திருவுருவத்தை மனதில் எப்படி வரித்துக் கொள்வது என்பதை ஒரு தூரிகையை எடுத்து வரைந்து காட்டியது போல் பட்டர் வரைந்திருக்கிறார். இன்னொரு சித்தரத்தை அபிராமி பட்டர் நமக்காகத் தீட்டிக் கொடுக்கிறார். கடம்ப மலர்கள் அம்பிகைக்கு மிகவும் உகந்தவை. கடம்ப மலர்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அம்பிகை பெரிதும் விரும்புகிறாள். ஐந்து மலர்களைக் கொண்ட அம்புகளை அவள் தன் படைக்கலனாகக் கொண்டிருக்கிறாள். தனு என்றால் வில். நள்ளிரவு நேரத்திலே பைரவ மூர்த்தியால் ...
More...More...More...More...