Blog

/Blog

சுகாவுடன் ஓர் உரையாடல்

எவ்வளவுதான் கடுமையான பணிச்சுமையாய் இருக்கட்டும். சுகா சிலகடமைகளிலிருந்து தவறுவதேயில்லை. திரைப்படப் பணிகள் ஒருபக்கம்,இளையராஜா 1000 நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஒரு பக்கம் என கடும் வேலைகளுக்கு நடுவிலும் நண்பர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார்! அதாவது நெருங்கின நண்பர்களை கலாய்க்க ஊசிமுனையளவு இடம் கிடைத்தாலும் அதில் ஓர் ஊரையே புகுத்தி ஊர்வலம் விடுவது,அவரைப் பொறுத்தவரை இருட்டுக்கடை அல்வா தின்பது மாதிரி. முனைவர். கு. ஞானசம்பந்தன் அவர்களை கோவையில்தான் முதன்முதலாக சுகா சந்தித்தார் என்று ஞாபகம். நட்சத்திர ...

போதாது போதாது போ

(நண்பர் திரு.என்.சொக்கன்,வெண்பாவில் வல்லவர்.ஓரிரு நாட்களுக்கு முன் சிவன் குறித்து போதாது போதாது போ என்னும் ஈற்றடியுடன் சில வெண்பாக்களைப் பதிந்திருந்தார். அந்த ஈற்றடியால் கவரப்பட்டு, சில நண்பர்களும் நானும் அதே ஈற்றடியில் தொடர்ந்து வெண்பாக்கள் பதிந்தோம். நான் எழுதிய வெண்பாக்கள் இவை) போதாது போகமென்ற போதை சலிப்பேற போதாரும் மஞ்சமும் புண்செய்ய- ஆதியனை போத வடிவனை போய்த்தொழவே கண்ணிரண்டும் போதாது போதாது போ நாகம் இருந்தாடும் நாதன் சிரசிருந்தே ஏகும் நதியின் இசைகேட்டு தாகமும் மீதூறக் காசிநகர் ...

கறுப்பு வெள்ளை

( நமது நம்பிக்கை மாத இதழில் ஒவ்வொரு மாதமும் கடைசிப் பக்கத்தில் என் கவிதை இடம்பெறும். பெரும்பாலும் அந்தப் பக்கம் வண்ணப் பக்கமாகவே அமையும். ஒரு மாதம் மட்டும் வெவ்வேறு விளம்பரங்கள் வந்ததால் வடிவமைப்பு நிர்வாகத்தில் கடைசிப் பக்கம் கறுப்பு வெள்ளையாக அமையும் என்று முடிவெடுத்தோம். எதிர்பாராத இந்த சமரசத்தை, திட்டமிட்டு நடந்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த நினைத்து இந்தக் கவிதையை எழுதிக் கொடுத்தேன்) கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் கனவின் வண்ணம் நூறு கறுப்பு வெள்ளை திரைப்படத்தில் ...

சிறப்புரை-திரு.புத்தர்!

 பொன்னுக்கு வீங்கிகள் பூமியில் ஒருநாள் புத்தன் வந்து சேர்ந்தானாம் கண்ணுக்குள் ஏதோ வெளிச்சம் கண்டவர் கைகள் கூப்பித் தொழுதாராம் இனனமும் தங்கம் சேர்க்கும் வழிகள் இவரே சொல்வார் என்றாராம் மண்ணைப் பொன்னாய் மாற்றிட நமக்கு மந்திரம் தருவார் என்றாராம் மன்றத்தில் ஒருநாள் புத்தனை அமர்த்தி மாலைகள் எல்லாம் போட்டாராம் பொன்னாடைகள் பலப்பல ரகங்களில்… புத்தன் மிரண்டு போனானாம் “இன்னும் ஒருசில நொடிகளில் அய்யா இன்னுரை நிகழும்” என்றாராம் மின்னல் போலே வெளியிலிருந்து மக்கள் மேலும் வந்தாராம் ஆசையே ...

நதியின் மறுபெயர் ஆறு

( இன்று சர்வதேசமருத்துவ நிபுணர்களாகத் திகழும் டாக்டர் ராஜசபாபதி, டாக்டர் ராஜசேகர் ஆகியோரின் தந்தை மருத்துவர் சண்முகநாதன். தாயார் திருமதி கனகவல்லி. இவர்களின் முயற்சியில் எழுந்ததே கோவை கங்கா மருத்துவமனை. இது உருவான விதம் பற்றி “ஓர் அன்னையின் கனவு” என்றொரு நூல் எழுதினேன். நூலின் நாயகிக்கு கடிதமாக எழுதியதே நூலின் முன்னுரையானது) மதிப்பிற்குரிய கனகவல்லி அம்மா அவர்களுக்கு, மரபின்மைந்தன் எழுதுகிறேன். வணக்கம்.கடிதம் எழுதும் கலையில் நீங்கள் கைதேர்ந்தவராம்.உங்கள் புதல்வர்கள் சொல்லியிருக்கிறார்கள். உங்களுக்கொரு கடிதம் எழுதத் தோன்றியது.இன்று ...

உற்சாகத்தின் தொழிற்சாலை-ரிஷபாரூடன்

பிறவிக் குணமல்ல உற்சாகம்.பழக்கத்தாலும் பயிற்சியாலும் வருவதுதான்.இந்த உண்மையை முதலில் ஒப்புக் கொள்வோம். எல்லோருக்கும்,எல்லாச் சூழலும் உற்சாகமாய் உள்ளத்தை வைத்திருக்கும் வாய்ப்பை வழங்காது.ஆனால்,உற்சாகமாய் இருப்பது என்று நீங்கள் முடிவெடுத்து விட்டால் வெளிச்சூழல் அதை மாற்றவே முடியாது.ஏன் தெரியுமா?வெளியேயிருந்து வருவதல்ல உற்சாகம். உள்ளே இருந்து உருவாவது அது. உங்கள் அழகுக்கும் உற்சாகத்துக்கும் சம்பந்தமில்லை.உங்கள் பணத்துக்கும் உற்சாகத்துக்கும் சம்பந்தமில்லை.உங்கள் வேலைக்கும் உங்கள் உற்சாகத்துக்கும் சம்பந்தமில்லை.இவையெல்லாம் மிக சாதாரணமாக இருந்தாலும் நீங்கள் அசாதாரணமானவராக,அதீத உற்சாகம் உள்ளவராக இருக்க முடியும். நீங்கள் யார் என்கிற ...
More...More...More...More...