“உங்கள் அலுவலக அறையில் தென்முகமாக தட்சிணாமூர்த்தி படம் வைத்து தீபமேற்றுங்கள்”. பாலரிஷி ஸ்ரீ  விஸ்வசிராசினி சொன்னதுமே செய்ய வேண்டுமென்று தோன்றிவிட்டது. எங்கள் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடக்கும். நான் வழிபாட்டுக் கூடத்துக்குப் போகும் முன்னரே…

“மிருகக்காட்சி சாலையில் இருந்து ஒரு யானை தப்பித்து விட்டது. அங்கே ஒரு பள்ளிக்கூடம் வேறு. இப்போது யானையைப் பிடிக்க என்ன செய்வீர்கள்?” அந்த இளைஞர்கள் மத்தியில் இந்தக் கேள்வியை விசியபோது யானைகள் பற்றிய எத்தனையோ…

அந்தமில்லாச் சுகமடைந்தோம்  கோட்டைகள் நடுவே ஸ்ரீபுரத்தில்-அவள்         கொலுவீற்றிருக்கும் சாம்ராஜ்யம்      மீட்டிடும் வீணைகள் மத்தளங்கள்-இளம்          மெல்லியர் நடனத்தில் சிவலாஸ்யம்      ஏட்டினில் எழுதும் வரியிலெல்லாம்-அவள்          எழில்திரு வடிகளின் ரேகைகளே      நீட்டிய சூலத்தின் நுனியினிலே-பகை          நடுங்கச் செய்திடும் வாகைகளே     பூரண கன்னிகை திருவருளே-இந்தப்         பிரபஞ்சம் தோன்றிய கருவறையாம்    …

தெளிவு தந்தாள் ஒருநாள் கூத்துக்கு நான்வைத்த மீசையை ஒவ்வொரு நாளும் ஒழுங்குசெய்தேன் வரும்நாள் ஏதென்ற விபரம் இல்லாமல் வாழ்வை நானாய் பழுது செய்தேன் அருகில் இருப்பதை அலட்சியம் செய்துநான் அங்கே பறப்பதற்கழுது வந்தேன் திருநாள்…

 உன்பாதம் துணையாகுமே ஆறுகால் கூப்பியே அழகான வண்டினம் அன்றாடம்தொழும்தாமரை ! ஈறிலா இன்பங்கள் எவருக்கும் தருகின்ற இணையில்லா செந்தாமரை! பேறுகள் யாவையும் தேடியே அருளிடும் திருமகள் அமர்தாமரை! கூறுமென் கவிதையின் வரிகளில் பதியட்டும் திருவடிப்…

சதுரங்கத்தில் சிப்பாய்களும் பிரதானிகளும் சூழ்ந்திருக்க ஆட்டம் தொடங்கி நான்கு நிமிஷங்கள் வரை நகர வழியில்லாமல் மலங்க மலங்க விழித்து நிற்கும் ராஜா ராணி வெள்ளைக் காய்கள் போல், தட்டின் நடுவில் “தின்னு தின்னு” என்று…

 ஏதேதோ செய்கின்றவள் காலத்தின் முதுகேறிக் கடிவாளம் தேடினால்                 கைக்கேதும் சிக்கவில்லை    ஓலம்நான் இடும்வண்ணம் ஓடிய குதிரையின்                  உன்மத்தம் புரியவில்லை     தூலத்தின் உள்ளிலே தேங்கிய கள்ளிலே                   தலைகால் புரியவில்லை       நீலத்தின் நீலமாய் நீலிநின்றாள் அந்த                   நொடிதொட்டு நானுமில்லை வந்தவள் யாரென்ற விபரமும் உணருமுன்                   வாவென்று ஆட்கொண்டவள் நொந்ததை நிமிர்ந்ததை நிகழ்ந்ததை எல்லாமே…

வாராய் வாராய்              மஹாசக்தி…! பூக்கள் இன்றைக்கு மலருகையில்-உன் பொற்பதம் சேர்ந்திடத் தவித்திருக்கும் தேக்கிய தேன்துளி யாவினிலும்-அந்த தெய்வக் கனவு தெறித்திருக்கும் பாக்கியம் செய்தோம் பராசக்தி-உன் பொன்நவ ராத்திரி தொடங்கியது ஏக்கம் அச்சம் சோர்வெல்லாம்-அட…

இந்தக் கேள்வி திருவில்லிப்புதூரில் கூடியிருந்த எல்லோருக்கும் ஒருநாள் எழுந்தது. அப்போது வைகோ சிவகாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். திருவில்லிப்புதூர் திருமால் திருக்கோவில் குடமுழுக்கு (சம்ப்ரோக்ஷணம்) விழாவுக்காக,வருகை தந்திருந்தார் வைகோ. அவருடைய தோள்களைத் தழுவிக் கொண்டு முழங்கால்…

 அபிராமியும்…. அபிராமி பட்டரும்….. அர்ச்சகர் மரபில் வந்தவன்தான் -அன்னை ஆட்கொள்ளப் போவதை அறியவில்லை பிச்சியின் பக்தியில் பித்தேறி -வந்த போதை சிறிதும் தெளியவில்லை உச்சி வரையில் ஜோதியொன்று-விசை உந்திச் சென்றதில் சுருண்டுவிட்டான் நிர்ச்சல நிஷ்டையில்…