உன்கையில் ஒருபிள்ளை இருக்கின்ற போதிலும் உலகத்தைப் பார்க்கின்ற மாதா தன்கையில் உள்ளதை தருகின்ற யாருக்கும் துணையாகும் மேரி மாதா கடலோரம் குடிகொண்ட மாதா கனவோடு கதைபேசும் மாதா கல்வாரி மலையிலே சொல்மாரி தந்தவன் கருவாக…

அது அங்கே இருக்கிறது என்று சொல்வதில் எந்தப் புகாராவது இருக்கிறதா என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதுவொரு சாதாரண வாக்கியம். அதன் அடியாழத்திலோ “அது அது அப்படித்தான்” என்கிற புரிதலின் பரிவு நீண்டு கிடக்கிறது.புரிதல், பக்குவத்தின்…

முடிவிலாப் பாதையில் முகமிலா மனிதர்கள் இதழிலாப் புன்னகை சிந்திய பொழுது இரவிலா நிலவினை மழையிலா முகில்களும் நிறமிலா வெண்மையில் மூடிய பொழுது விடிவிலாச் சூரியன் வழியிலாப் பாதையில் தடையிலா சுவரினைத் தாண்டிய பொழுது கடலிலாச் சமுத்திரம் கரையிலா மணலினில் பதிலிலாக் கேள்வியாய் மோதிடும் அழுது…

நாதரூபம்

January 2, 2012 0

(02.01.2012  கோவை மாஸ்திக்கவுண்டன்பதி பாலா பீடம் ஸ்ரீ விஸ்வசிராசினி தரிசன அனுபவம்) ருத்ர வீணையின் ஒற்றை நரம்பினில் ருசிதரும் ராகங்கள் முத்திரை பிடிக்கும் மோன விரல்களில் தாண்டவக் கோலங்கள் ரத்தினத் தெறிப்பாய் விழுகிற வார்த்தையில்…

 புன்னை வனத்தொரு பூ மலர்ந்தால் -அதை பிரபஞ்சம் எங்கோ பதிவுசெய்யும் தன்னை உணர்ந்தோர் உயிர்மலர்ந்தால்-அதை தெய்வங்கள் தேடி வணக்கம்செய்யும் முன்னை வினைகளைக் கரைப்பதற்கும்-இனி மேலும் மூளாதிருப்பதற்கும் உன்னும் உயிரினில் அருள்சுடரும்-அதன் உந்துதலால் தினம் நலம் நிகழும் காலத்தின் கறைகள் கழுவவந்தோம்-செய்யும் காரியம் துணைகொண்டு மலரவந்தோம்…

டிசம்பர் 2011 ஓம் சக்தி இதழில் கண்ணகி மானுடப்பெண் அல்ல என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அதனை எழுதியவர் பேராசிரியர் இராம.இராமநாதன் அவர்கள். அந்தக் கட்டுரையில் பேராசிரியர், கண்ணகி மானுடப்பெண் அல்லள் என்பதால்…