ஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் உறங்கிக்கிடக்கிறதொரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கியபிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை. தனக்குள் இருக்கும்…

சிலரைப் பொறுத்தவரை, வெற்றியென்பது, வானத்திலிருந்து வருகிற வரம். கடவுள் கொடுக்கிற கொடை. ஜாதகம் செய்கிற ஜாலம். விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வீணாக நேரத்தைக் கழிப்பவர்கள், எப்போதும் சாதிக்கப் போவதில்லை. காலமும் இடமும் கருதிச்செய்வது வெற்றிக்கு…

எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எல்லா வசதிகளும், ஆனால், தொட்டுப் பேசும் உரிமையில் பலருக்கும் தோழமை வாய்ப்பதில்லை. தோள் தொட்டுப் பேசுவது உறவுக்கும் உரிமைக்கும் அடையாளம். பரிவுக்கும், நட்புக்கும் அடையாளம். தோழனே! உனது தோள்களைத் தொட்டு நான்,…

ஓர் அரசன் தன் குடிகளை சரியாகப் பராமரித்து காப்பாற்றினால் அவர் குடிமக்களுக்கு கடவுள் போன்றவர் என்பதை திருவள்ளுவர் முன்மொழிந்தார். “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு) இறையென்று வைக்கப்படும்” என்கிறார். இனியன செய்தால் இதய தெய்வமென்று…

ஒரு குழந்தையின் பார்வையில் ஒவ்வொரு தினமும் தாயிடம் தொடங்கி தாயிடமே முடிகிறது. மூன்று வயதிலேயே திருவருட் தொடர்பும் உமையம்மையின் திருமுலைப்பால் அருந்தும் பேறும் பெற்ற திருஞானசம்பந்தக் குழந்தைக்கு? அம்மே அப்பா என்றழுதபோது அம்மையும் அப்பனுமாய்…

நீங்கள்  கடந்த இருபதாண்டுகளாகக் கோவையின் இலக்கிய உலகுடன் பரிச்சயம் கொண்டவராக இருந்தால் கோவை பழநிசாமி என்னும் பெயரையோ அப்பெயர் கொண்ட மனிதரையோ ஒருமுறையேனும் கடந்து வந்திருக்கக் கூடும். விஜயா பதிப்பகத்தில்,வேனில் கிருஷ்ணமூர்த்தியின் நந்தினி அச்சகத்தில்,கோவையில்…

( அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான எழுத்துச் சரக்கு, லிமரிக். இந்த வடிவத்தில் தமிழில் எத்தனையோ ஆண்டுகளாய் லிமரிக் கவிதைகள் இயங்குகின்றன. முகநூலில் இயங்கும் லிமரிக் குழுவில் நானெழுதிய லிமரிக்குகள் சில) மிதிவண்டி பழகிவிட்டா மிகவுமது சொகுசு…

சிறுகதையின் வடிவம்தான் அதன் வெற்றியின் மிக முக்கியமான அம்சம். பல ஆண்டுகளுக்கு முன்னர் தன் கவிதையொன்றில் “முடிக்கத் தெரியாத சிறுகதையை குறுநாவல் என்று கூப்பிட்ட மாதிரி” என்று கிண்டல் செய்தகவிஞர் வைரமுத்து தன்சிறுகதைகளை மிக…

விமர்சனக் கோட்பாடுகள் என்பவை நேரடியாகச் சொன்னால் வாசிப்பின் கூரிய எதிர்வினைகள். தொடர் வாசிப்பிற்குப் பழகியவர்கள் தங்கள் வாசிப்பனுபவத்தின் விளைவாய் அத்தகைய கோட்பாடுகளை உருவாக்குகிறார்கள்.நான் கோட்பாடுகளை இரண்டாம் பட்சமாகக் கருதக் காரணமே அந்த அளவுகோல்கள் பெரும்பாலும்…

“உங்க டூத் பேஸ்ட் ல உப்பு இருக்கா, கரி இருக்கா, மஞ்சள் இருக்கா, மிளகாய்ப்பொடி இருக்கா” என்று கேட்பது போல “உங்க கதையிலே குறிப்பமைதி இருக்கா, வடிவ அமைதி இருக்கா, கூற்றமைதி இருக்கா” என…