சேவை மனப்பான்மை மனிதனுடன் ஒட்டிப் பிறந்த ஒரு குணம். அடுத்த உயிர் நலம் பெறும்படி, மகிழ்ச்சி பெறும்படி செய்ய வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்குமே உண்டு. பிறந்து வளர்ந்த சூழ்நிலை, வாழ்கிற சூழல் போன்றவற்றின்…

சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தில் ஆலாலசுந்தரர் வழிவழியே தனக்கு அடிமை என்று எழுதப்பட்ட ஓலையினை இறைவன் சிவனடியார் வேடம் தரித்து கொண்டு வருகிறார். அதை நம்பாத சுந்தரமூர்த்தி நாயனார் கையிலே அந்த ஓலையை வாங்கிப் பார்க்கிறார்.…

சிவகாமி ஆண்டார் பூக்குழலை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல அரசனுடைய பட்டத்து யானை மதம் கொண்டு அந்த பூக்குழலைப் பிடுங்கி காலாலே துவம்சம் செய்கிறது. இறைவனுக்குரிய மலர்கள் இப்படி தெருவில் இறைந்துபட்டனவே என்ற வருத்தத்தில் சிவகாமி…

அடிப்படையில் சேக்கிழார் அமைச்சராக இருந்தவர். ஆட்சி பொறுப்பின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர். பெரிய புராணத்தில் புகழ்ச்சோழர் போன்ற அரசர்கள் காணப்படுகின்றனர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட நாயன்மார்கள் பெரிய புராணத்தில் பேசப்படுகின்றனர். காவியத்தை எழுதிச்செல்கிறபோதே ஆட்சிப்பொறுப்பின்…

அடிப்படையில் அதற்கு உளவியல் ரீதியாக ஒரு காரணம் உள்ளது. திருவாமூர் என்ற திருத்தலத்தில் அவதரித்தவர் திருநாவுக்கரசர். அப்போது அவருடைய பெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியாருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கலிப்பகையார் போரில் இறந்து விடுகிறார். அந்த…

வழக்கமாக அப்பூதியடிகள் புராணங்களில் பேசப்படுகின்ற விஷயங்களைக் கடந்து அதில் ஒரு சம்பவத்தை நாம் ஆராய்வோமேயானால் சேக்கிழார் ஒரு மிகப் பெரிய உளவியல் அறிஞராக விளங்குவதை அறியலாம். திங்களூர் என்கிற ஊரில் வசித்து வருகிறார் அப்பூதியடிகள்,…

இன்று பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக எத்தனையோ உத்திகளைக் கையாளுகின்றனர். பேருந்து நிறுத்தங்கள், நிழற்குடைகள், பத்திரிகை விளம்பரங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று பார்க்குமிடமெல்லாம் அந்தப் பெயரை தெரியச் செய்வதில்…

நாயனாரின் பெயரை வைத்தே அவருடைய இயல்பை நாம் புரிந்து கொள்ளும்விதமாக சேக்கிழார் நம்மைத் தயார் செய்கிறார். ஆங்கிலத்தில் Reformist என்றொரு சொல் உண்டு. அதற்கு நேரான தமிழ்ச்சொல் சீர்திருத்தவாதி என்பதாகும். அதே போல Revolutionist…

சட்டப்படி தவறில்லை என்றாலும் தார்மீகப்படி ஒன்றைத் தவறு என்று அரசன் முடிவு கட்டுகிறபோது அவனை சமாதானப்படுத்துவதற்கு அமைச்சர்கள், “இதற்காக நீங்கள் கவலைப்படவேண்டாம். ‘இதற்கு சில பரிகாரங்களைச் செய்யலாம்’ என்று நம்முடைய அந்தணர்கள் சில முறைகளை…

திருத்தொண்டர் புராணத்தின் தொடக்கத்திலேயே மனுநீதிச் சோழனின் வரலாற்றை சேக்கிழார் எழுதுகிறார். அரசர்கள் உலவக்கூடிய வீதியில் பசுவோ அதன் கன்றோ புகுவதற்கு வாய்ப்பில்லை. சுற்றி நிறைய தேர்கள் சூழ்ந்து வர மனுநீதிச் சோழனின் மகன் தேரிலே…