இன்றளவும் உலக சமுதாயம் முழுமையிலும் நிகழும் நிகழ்ச்சிகளைப் பார்ப்போமேயானால் சட்டப்படி தவறு என்று சிலவும், தார்மீகப்படி தவறு என்று சிலவும் பேசப்படுகின்றன. வரையறுக்கப்பட்ட சட்டங்களின்படி ஒரு மனிதரின் செய்கை குற்றமில்லை என்று தீர்ப்பாகிவிடலாம். ஆனால்…

இறையடியார்களாக இருப்பாரேயானால் மாட்டுக் கறியைத் தின்கிற புலைசாதியில் பிறந்திருந்தாலும் அவர்களும் நம்மால் வணங்கத்தக்கவர்கள் என்கிற கருத்தை திருநாவுக்கரசர் பாடுகிறார். “அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவூரித்துத் தின்றுழலும் புழையேரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில் அவர்கண்டீர் நாம்…

கண்ணாடி வளைக்கரம்போல் கலகலக்கும் அலைகளெல்லாம் மண்ணோடு மோதுகிற மோகனத்து விளையாட்டை கண்ணார நாம்காண காலம்வரப் போகுதடி-குதம்பாய் விண்ணவரும் வியக்கின்ற விந்தைவரப் போகுதடி வேர்தடவி மரம்தடவி விதம்விதமாய் மலருதிர பூரதம்போல் நடைநடைக்கும் புனிதமான நதிகளெல்லாம் பாரதத்தில்…

இன்று அதிகாரப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு நெருக்கமாக உள்ள உறவினர்களும் நண்பர்களும் சட்டத்திற்கு புறம்பான செய்கைகளில் ஈடுபடுகிறபோது தங்கள் தொடர்புகளை துணையாகக் கொண்டே தண்டனைகளில் இருந்து தப்பிகிற காலத்தில் இறைவனுக்கே இனிய நண்பராக விளங்கினாலும் செய்து…

சங்கிலியாரின் கனவிலே சிவபெருமான் வந்து சுந்தரருடைய சிறப்புகளையெல்லாம் சொல்லி அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். இவர் திருமணமானவர் என்று சங்கிலியார் சொல்லிக்காட்ட அவர் உன்னைப் பிரிந்து போகாத வண்ணம் உறுதிமொழி வாங்கிக்கொள். சத்தியம்…

அடியவர்களில் இறைவனுக்கு தோழர் என்ற நிலையிலே திகழ்ந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். தம்பிரான் தோழன் என்றும் வன்தொண்டர் என்றும் போற்றப்பட்டவர் இவர். அவருக்கு சிவபெருமான் பலவகைகளிலும் ஒரு நண்பராகத் துணை நின்றிருக்கின்றனர். சுந்தரரின் புகழைக் கேள்விப்பட்ட…

அதேபோல சிவஞானம் கைவரப்பெற்று திருஞானசம்பந்தர் தேவாரம் பாடத் தொடங்கி இறைநெறியில் ஈடுபட்ட கால கட்டம் அவருடைய மூன்றாவது வயதிலிருந்து துவங்குகிறது. அப்போதே தன் துணைவியார் மதங்கசூளாமணியோடு பங்குபெற்று திருஞானசம்பந்தரின் பதிகங்களை யாழிலிட்டு வாசித்து பாடுகிற…

இன்றும் இறைநெறியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் என்று இருப்பவர்களிடையே கருத்து மோதலும் யார் பெரியவர் என்கிற ஆணவப்போக்கும் ஒரு சில இடங்களில் தென்படுவதைக் காண்கிறோம். இறைவனுடைய தொண்டர்கள் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் பணிவும் பக்தியும்…

‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ தங்கள் அனுபவத்தில் இறைத்தன்மையை உணராதவர்கள்தான் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொள்வார்கள். உலகம் முழுவதும் தன் அனுபவத்தில் உணர்ந்து அவன் பெருமைகளை ஓத வேண்டும். அத்தகைய அருமைப்பாடு கொண்டவன் சிவபெருமான் என்கிறார்…

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் உருவாக என்ன காரணம் என்ற கேள்விக்கு சேக்கிழார் சொல்லும் விடை முக்கியமானது. “உலகில், இரண்டு வகையான இருள் உண்டு. ஒன்று, பூமியைப் போர்த்துகின்ற புற இருள். இன்னொன்று மனிதர்கள்…