ஏதேதோ செய்கின்றவள் காலத்தின் முதுகேறிக் கடிவாளம் தேடினால்                 கைக்கேதும் சிக்கவில்லை    ஓலம்நான் இடும்வண்ணம் ஓடிய குதிரையின்                  உன்மத்தம் புரியவில்லை     தூலத்தின் உள்ளிலே தேங்கிய கள்ளிலே                   தலைகால் புரியவில்லை       நீலத்தின் நீலமாய் நீலிநின்றாள் அந்த                   நொடிதொட்டு நானுமில்லை வந்தவள் யாரென்ற விபரமும் உணருமுன்                   வாவென்று ஆட்கொண்டவள் நொந்ததை நிமிர்ந்ததை நிகழ்ந்ததை எல்லாமே…

வாராய் வாராய்              மஹாசக்தி…! பூக்கள் இன்றைக்கு மலருகையில்-உன் பொற்பதம் சேர்ந்திடத் தவித்திருக்கும் தேக்கிய தேன்துளி யாவினிலும்-அந்த தெய்வக் கனவு தெறித்திருக்கும் பாக்கியம் செய்தோம் பராசக்தி-உன் பொன்நவ ராத்திரி தொடங்கியது ஏக்கம் அச்சம் சோர்வெல்லாம்-அட…

இந்தக் கேள்வி திருவில்லிப்புதூரில் கூடியிருந்த எல்லோருக்கும் ஒருநாள் எழுந்தது. அப்போது வைகோ சிவகாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். திருவில்லிப்புதூர் திருமால் திருக்கோவில் குடமுழுக்கு (சம்ப்ரோக்ஷணம்) விழாவுக்காக,வருகை தந்திருந்தார் வைகோ. அவருடைய தோள்களைத் தழுவிக் கொண்டு முழங்கால்…

 அபிராமியும்…. அபிராமி பட்டரும்….. அர்ச்சகர் மரபில் வந்தவன்தான் -அன்னை ஆட்கொள்ளப் போவதை அறியவில்லை பிச்சியின் பக்தியில் பித்தேறி -வந்த போதை சிறிதும் தெளியவில்லை உச்சி வரையில் ஜோதியொன்று-விசை உந்திச் சென்றதில் சுருண்டுவிட்டான் நிர்ச்சல நிஷ்டையில்…

பீடமேறினாள் படிப்படியாய் பதம்பதிய பீடமேறினாள்-வினை பொடிப்பொடியாய் நொறுங்கும்படி பார்வைவீசினாள் இடிமழையை முன்னனுப்பி வரவுசாற்றினாள்-பலர் வடித்தளிக்கும் கவிதைகளில் வண்ணம்தீட்டினாள் வீடுதோறும் ஏற்றிவைக்கும் விளக்கில் வருகிறாள்-விழி மூடிநாமும் திறக்கும்முன்னே கிழக்கில் வருகிறாள் ஏடுதோறும் பத்தர் சித்தர் எழுத்தில்…

கவிஞர் வைரமுத்து நேற்று மாலை கோவைக்கு வந்தார்.அவருக்கு மிகவும் பிடித்தமான ஊர்களில் கோவையும் ஒன்று. இன்று காலை ஹோட்டல் விஜய் பார்க் இன் என்னும் புதிய மூன்று நட்சத்திர விடுதியைத் திறந்து வைக்கிறார். அதன் உரிமையாளர் திரு. கோவை இரமேஷ், கவிஞருக்கு…

 பொன்னூஞ்சல்     வீசி யாடுது பொன்னூஞ்சல்-அதில் விசிறிப் பறக்குது செம்பட்டு பேசி முடியாப் பேரழகி-அவள் பாதம் திரும்புது விண்தொட்டு ஓசை கொடுத்த நாயகிதான்- அங்கே ஓங்கி அதிர்ந்து ஆடுகிறாள் கூசிச் சிணுங்கும் வெண்ணிலவை-தன்…

சுடர் வளர்ப்பாள் பக்கத்தில் நடப்பவள் பராசக்தி- நம் பார்வையில் படுவாள் சிலசமயம் தர்க்கக் குப்பைகள் எரித்துவிட்டால்-அவள் திருவடி தெரிந்திட இதுசமயம் செக்கச் சிவந்த தளிர்விரல்கள்- நம் சிகையைக் கோதவும் இதுதருணம் இக்கணம் எழுதும் இந்தவரி -அவள்…

என்ன வேண்டுவதோ…..? நீலக் கருங்குயில் பாட்டினொலி- வந்து நேர்படக் கேட்டிடும் மாலையிலே வாலைச் சிறுமியின் வடிவெடுத்தே-அவள் வந்துநின்றாளென் எதிரினிலே தூல வடிவினில் ஓளிந்துகொண்டால்-இது தாயென்று சேய்மனம் அறியாதோ ஜாலங்கள் காட்டிடும் சக்தியவள்-முக ஜாடை நமக்கென்ன…

அற்புதர்-6

October 13, 2012 0

அற்புதரின் கைப்பையில் சில பாம்புக் குட்டிகள் இருக்கும். புற்றில் இருக்கும் பாதுகாப்புணர்வைக் காட்டிலும் அங்கேதான் பலமடங்கு பத்திரமாய் உணரும். அற்புதருக்கு பாம்புகளுடன் அறிமுகம் உண்டு.அவரை பாம்புகளுக்கு அற்புதராய்த் தெரியுமோ என்னவோ அவரின் அற்புதங்களை அவையறியும்.…