வாழ்க்கை என்பது நெடுஞ்சாலை
வேகத்தடைகளும் இருக்கலாம்
போக்குவரத்து நெரிசலை
பார்த்துப் போனால் ஜெயிக்கலாம்!

பச்சைவிளக்கு தெரிகையில்
பயணம் தொடர்ந்தால் நல்லது
லட்சியவிளக்கு தொடும்வரை
எரிபொருள் மனதில் உள்ளது!

எத்தனை பயணிகள் சாலையில்!
எல்லோருக்கும் அவசரம்!
எத்தனை தொலைவு பாதையோ
அத்தனை பொறுமை அவசியம்!

எங்கே போகிறோம் என்பதை
எப்படிப் போகிறோம் என்பதை
உங்கள் வரைபடம் காட்டினால்
உங்கள் பயணம் வெற்றிதான்!

பாதை தவறிப் போகையில்
பயணம் குழம்பிப் போகலாம்
ஏது திசையெனத் தெரிந்தவர்
எல்லாம் ஊர்சென்று சேரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *