Entries by marabin maindan

ஜெயகாந்தன் – வைரமுத்து சர்ச்சை!-என் யூகம் சரிதான்

குமுதம் வார இதழில் ‘வைரமுத்து சிறுகதைகள்’ எனும் நெடுந்தொடரைப் பாராட்டி ஜெயகாந்தன் அவர்களின் பெயரிலான கடிதம் வெளிவந்தது தொடர்பான சர்ச்சையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளானவர்களில் நானும் ஒருவன். நான் ஜெ.கே. மீது வழிபாட்டுணர்வு […]

ஆதலால் அருமை நெஞ்சே

முழக்கங்கள் முனகலாகும் முனகலும் ஓய்ந்து போகும் விளக்கங்கள் விவாதமாகும் விவாதமும் மறந்து போகும் கலக்கங்கள் தெளியலாகும் கேள்விகள் தோன்றும் போகும் நிலைக்கொள விரும்பும் நெஞ்சே நித்தியன் பெயரைப் பாடு மகுடங்கள் களவு போகும் மகிமைகள் […]

கடப்பாள் என் கடல்

புவனம் ஆள்பவள் ஈஸ்வரியாம்-அடப் போடா அதனால் எனக்கென்ன குவளைத் தண்ணீர் நான்கேட்டால்-அவள் குடுகுடு எனவந்து நீட்டுகிறாள் கவலை கொஞ்சம் படிந்தாலும்-அவள் கைகளில் அள்ளித் தேற்றுகிறாள் “துவள வேண்டாம் எப்போதும்-நல்ல துணை நான்” என்று காட்டுகிறாள் […]

மும்மத வேழமாய் இங்கிருந்தான்

மூடிக் கிடந்த குளிர்பெட்டி-அதில் மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே பாடி முடிந்த கீர்த்தனையாய்- எங்கள் பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே மேடுகள் ஏறிய ஜீவநதி -நெடும் மௌனத்தில் தூங்கிய தருணமிது கூடு கிடத்தி சிறகடித்தான் -ஒரு கனல்பறவை […]

எழுத்து மட்டுமா எழுத்தாளன்?

ஜெயகாந்தன் எழுதாத நேரங்களிலும் ஓர் எழுத்தாளராய் ஒளிர்ந்தவர்.தொழில் சார்ந்த முழுநேர எழுத்தாளர்கள் பலருண்டு. ஆனால் அவர் நுண்ணுணர்வின் ஓயாச் சுடரால் ஒளிவீசிக் கொண்டேயிருந்தவர். இரவுப் பொழுதுகளில் கதிரவன் நம் கண்ணுக்குத் தெரியாமல் வேறெங்கோ ஒளிவீசியதைப் […]

குறும்பாவில் சிலம்பு

மாநாய்கன் பெற்றமகள் மலர்ந்தாள் மாசாத்து வான்மகனை மணந்தாள் மானாய் மருண்டாள் மதுரைநடந்தாள் கோனவன் பிழைசெய்ய கண்ணகியும் கனலாகி எழுந்தாள் சுதிசேர்த்தாள் மாதவியும் யாழில் சுரம்சேர்த்தாள் பூம்புகாராம் ஊரில் விதிசேர்த்த காரணம்  வல்வினையின் காரியம்  பதிநீத்தான் […]

முதுபெரும் தமிழறிஞர் ல.ச. மறைந்தார்

தேர்ந்த தமிழறிஞரும்,ரசிகமணி டி.கே.சி. அவர்களின் அணுக்கச் சீடருமான வித்வான் ல.சண்முகசுந்தரம் சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 94. தன் குருநாதரைப் போலவே மாபெரும் ரசிகராய் வாழ்வாங்கு வாழ்ந்த அவர் பல நூல்களை எழுதியுள்ளார். சாகித்ய […]

உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு

காடு திருத்திய மானிடர்கள்-ஒரு காலத்தில் நாடுகள் அமைத்தளித்தார் வீடுகள் வீதிகள் சமைத்தவரோ-பல வாழ்க்கை முறைகளும் வகுத்தளித்தார் தேடும் வசதிகள் பெருகியபின்-நல்ல தேசங்கள் வளர்ந்து பொலிகையிலே ஏடு புகழ்ந்திட சிங்கையினை-புகழ் ஏற்றி வளர்த்தார் லீகுவான் இயூ […]

தொட்டதுமே பட்டவினை தூள்

(இசைக்கவி ரமணன் , விசாகப்பட்டினம் அருகிலுள்ள பீமுனிப் பட்டினத்தில் பீடம்கொண்டிருக்கும் தன் குருநாதரை தரிசித்த அனுபவங்களைப் படங்களாய் பகிர்ந்திருந்தார்.அந்தப் படங்கள் பார்த்த உவகையில் இந்த வெண்பாக்கள் எழுதினேன்…..பாம்பறியும் பாம்பின் கால்!!!) நெருப்பின் குளுமை நிழலை, […]