Entries by marabin maindan

வடு

    இழந்த உறவின் ஏக்கத் தழும்புகள் இதயத்துக்குள் இல்லாமலில்லை. எதிர்பாராத நொடிகளில் திடீரென எழுகிற வலியை எழுதுவதெப்படி? வருடிக் கொடுக்கிற விசிறிக் காற்று வந்து கொண்டே இருக்கிற போதும் வீசிப்போன தென்றலின் நினைவு […]

புத்த பூர்ணிமா – 2

  சத்சங்கத்தின் சரண தியானத்துடன் புத்த பூர்ணிமா பொழுதின் துவக்கம். மூடிய இமைகள் மெதுவாய்த் திறந்ததும் வானக் கவிதையாய் வண்ண வெண்ணிலவு கிழக்கிலிருந்து கிளர்கிற ஞானமாய் தகதகக்கின்ற தங்க அற்புதம்; பூஜ்ய வடிவம், பூரண […]

மறுபக்கம்

  ஆகாயத்தின் அடுத்த பக்கம் என்ன நிறமாய் இருக்கக் கூடும்? வானம் பார்க்க வாய்க்கும் போதெலாம் பௌர்ணமிக் கடலாய்ப் பொங்குமிக் கேள்வி. சூரிய முதுகு சுட்டுச் சுட்டுக் காய்ந்த பழம்போல் கறுத்துக் கிடக்குமா? வெள்ளை […]

புத்த பூர்ணிமா -1

  வெற்று வானத்தில் வண்ணம் குழைக்கும் நெற்றித் திலகமாய் நிலவின் சித்திரம். பௌர்ணமிப் பொழுதில் பார்வையைக் குவித்து நிலவுடன் மனிதன் நின்றிடலாகுமா? வெண்ணிலா என்பது விண்ணையும் சேர்த்துதான். கண்கள் சிமிட்டும் நட்சத்திரங்களைக் கணக்கில் கொள்ளாத […]

வழிகள் மறந்த வீதிகள்

    ஜல்லிக் கலவையின் சட்டியைக் கவிழ்த்த மல்லிகாதான் அதை முதலில் பார்த்தது. “ரோடு ரோலர்” ஏறி நகர்ந்ததும் பாதை தானாய்ப் போகத் தொடங்கிற்று. வீதி மெதுவாய்ப் புரண்டு புரண்டு வேறுதிசையில் விரையலாயிற்று. மேஸ்திரி […]

கோடு படுத்தும்பாடு

  ஒரு நேர்க்கோடு வரையத்தான் நீண்ட காலமாய் முயல்கிறேன். வேண்டாத இடங்களில் அது வளைந்து கொள்கிறது. நான் சேமித்து வைத்திருக்கும் பதில்களின் பின்னால் நின்று கொண்டு அவற்றைக் கேள்விகளாக்கி விடுகிறது. சாதாரண சம்பவங்களில்கூட ஆச்சரியக் […]

ஏன் அப்படி?

  எந்த வீட்டுக் குழந்தையென்றாலும் கன்னம் தடவிக் கொஞ்சியிருப்பேன் பளிங்குக் கண்கள் பளிச்சிட வேண்டிக் குரங்குச் சேட்டைகள் காட்டியிருப்பேன். அன்று மாலையும் அப்படியேதான்! புடவைக் கடையில் பொம்மையைப் பார்த்து விழிகள் மலர்த்திய வெள்ளரிப்பிஞ்சை பேனா […]

துளித்துளியாய்…

  தென்றலில்லாத இன்றைய புழுக்கத்தை மௌனமாய் ஏற்பதன்றி வேறென்ன செய்யுமாம் வெள்ளைப் பூக்கள். சூரியனுக்குத்தான் தெரியும்… நிலாக்கால வெளிச்சத்தையும் நட்சத்திரக் கண் சிமிட்டலையும் பார்க்கக் கிடைக்காத வருத்தம். இன்னும் கொஞ்சநேரம் பாடிக் கொண்டிருக்குமாறு சொல்லியனுப்ப […]

பத்மாசுரர்கள்

  தவத்தின் உச்சியில் தோன்றிய கடவுளின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தான் தவசி. சும்மா இருந்த கடவுளை இப்படி வம்புக்கிழுத்தா வேடிக்கை பார்ப்பது? கொணர்ந்த வரங்களை என்ன செய்வான் பாவம்! திண்ணையில் வைக்க அனுமதிக்கலாம்தான். கல்லாய் […]