Blog

/Blog

மார்கழி 24-சிறியவராய் உணர்பவரே பெரியவர்கள்

பக்தி கனிகையில் வருகிற பணிவு, அற்புதமானது. மனிதன் ஓர் எல்லை வரையில் தான் எவ்வளவு பெரியவன் என்பதை நிறுவவே முற்படுகிறான்.ஆனால் அவன் பக்குவம் அடைகிற போது தன்னினும் மேம்பட்ட இறையடியார்கள் பலரும் இருப்பதைக் கண்டு அவர் தம் பெருந்தொண்டுகளுக்குத் தலைவணங்குகிறான். சிவசந்நிதியில் பல்வகை அடியார்களையும் கண்டு மணிவாசகர் மனம் உருகிப் பாடுகிறார். இசைக்கருவிகளை இசைப்பவர்கள், ரிக் வேதம் ஓதுபவர்கள், தோத்திரப் பாடல்களை பாடுபவர்கள், தொழுபவர்கள்,அழுபவர்கள்,பக்திப் பெருக்கில் துவண்டு விழுபவர்கள்,தலைக்கும் மேல் கைகூப்பி உருகி நிற்பவர்கள்..இவர்கள் ம்த்தியில் என்னையும் ...

மார்கழி 23-எல்லோருக்கும் அரியன்! எமக்கெளியன்!

இந்தப் பாடலுக்கான மரபான உரைகளில் ஒன்று, பக்தியின் பரிணாமத்தை சுட்டுவதை பள்ளி மாணவனாக இருந்த போது வாசித்தேன். மகாவித்வான் தண்டபாணி தேசிகரின் உரை அது. “கூவின பூங்குயில்” என்று பாடல்தொடங்குகிறது.பொழுது புலர்வதற்கு முன் கூவக் கூடியது கோழி என்பார்கள். மாணிக்கவாசகரே திருவெம்பாவை8 ஆம் பாடலில். “கோழி சிலம்ப,சிலம்பும் குருகெங்கும்” என்பார்.ஆனால் இங்கு முதலில் குயிலை யும் பின்னர் கோழியையும் மூன்றாவதாக குருகையும் நான்காவதாக வெண்சங்கையும் சொல்கிறார். இவை பறவைகளைக் குறிப்பன அல்ல, உயிரைக் குறிப்பவை என்பது பழைய ...

மார்கழி 22- கருணைக் கதிர்! கண்கள் மலர்!

சிவபெருமான் திருப்பள்ளியெழும் கோலத்தை நுணுக்கமாக விவரிக்கிறார் மாணிக்கவாசகர். ஒரு குழந்தை பிற நாட்களில் துயில் எழுவதற்கும் தன் பிறந்த நாளில் துயில் எழுவதற்கும் வேற்றுமை உண்டு. கண்களைத் திறக்கும் முன்னரே அந்தநாளைக்குறித்த உவகைச் சித்திரங்கள் குழந்தையின் மனதில் உருவாகின்றன.இமைகள் மலரும் முன்னரே இதழ்கள் மென்னகையில் மலர்கின்றன. பிறந்தநாள் கொண்டாடும் பிள்ளையைப் போலவே தினம் தினம் துயில் எழுகிறான் சிவபெருமான்.இந்திரனின் திசை எனப்படும் கிழக்கில் கதிரவன் தோன்றப் போகிறான்.அதற்கு முன்னே சிவபெருமான் திருமுகத்தில் கருணைக் கதிர் எழ, கண்களாகிய ...

மார்கழி 21- திருப்பள்ளியெழுச்சி

சிவபெருமானுக்கு மாணிக்கவாசகர் பாடும் திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவையின் இணைப்பதிகமாக காணப்படுகிறது. வாழ்வின் மூல முதலே சிவன் எனும் பொருளில் “போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே” என்று தொடங்குகிறார்.உயிரின் சிறப்பே அதற்குள் இருக்கும் இறைத்தன்மை. தனக்குள் இருக்கும் இறைத்தன்மையை எழுப்புவதும் அதனை எட்டுவதுமே உயிரின் மாண்பு.”வாழ்முதல் ஆகிய பொருளே” என்னும் விளி உயிரின் தன்மையில் உறைந்திருக்கும் சிவத்தை நோக்கியது. பொழுது புலர்கையில் சிவபெருமானுக்கு மலரருச்சனை புரிய மலர்ந்த தாமரைகளை மாணிக்கவாசகர் கொண்டு வருகிறார். எங்கோ மலர்ந்த மலருமல்ல.ஏனோதானோ என பறித்ததுமல்ல. ...

மார்கழி 20- திருவடித் திளைப்பு

சைவத்தின் உயிர்நாடி சிவப்பரம்பொருளின் செங்கழல் இணைகளில் சென்று சேரும் நற்கதி. உயிரின் கடைத்தேற்றத்தை சிவபெருமான் திருவடிகள் எவ்வாறெல்லாம் நிகழ்த்துகின்றன என்பதை நிரல்படச் சொல்கிறார். அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் அமையும் திருவடிகளே,உயிர்களைத் தோற்றுவிக்கின்றன.உயிர்க்குரிய போகங்களையும் அருள்கின்றன.உயிர்களின் எல்லையாகவும் திகழ்கின்றன.மாலும் அயனும் காணவொண்ணா திருவடிகள் அடியவர்கள் உய்யும் விதமாய் வந்து ஆட்கொள்கின்றன. அந்தத் திருவடிகளில் திளைக்கும் பாவனையில் மார்கழி நீராடுகிறோம் என்கின்றனர் பெண்கள். போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா ...

மார்கழி-19 இல்லறம் வழியே இறையறம்

தன் தந்தை மாமனாராகும் தருணம் குறித்த கேலிச்சொல் அக்காலத்துப் பெண்கள் மத்தியில் இருந்திருக்குமோ என்னும் யூகத்தை இப்பாடல் கிளப்பி விடுகிறது. இப்படி வைத்துக் கொள்வோம்.ஒரு தந்தைக்கு இரண்டு பெண்கள். முதல் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தார். மகளை மணமகன் வசம் ஒப்படைக்கும் போது  பெருமிதமும் உவகையும் அழுகையுமாய் கலவை உணர்ச்சிகளில் அவர் சொன்ன சொல் “உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்”. அந்தக் குடும்பமே அந்நொடியில் ஆடிப் போனது. பின்னாளில் இளைய மகள் மனதில் கம்பீரமான  தன் தந்தை கசிந்து ...
More...More...More...More...