பின்ன முடியாத பொன்வலையை வீசியே என்னையும் உன்னையும் யார்பிடித்தார்?-சின்ன இழையும் சுமையாய் இறுகும்,நாம் செய்யும் பிழைகள் மலியும் பொழுது. பொழுது புலருங்கால் பூவின் அரும்பு தொழுதகை போலே திகழ -அழுததுளி வெண்பனியாய் மின்ன, வருமே…
லம்யம் எனுமோர் லயமும் அதிர்வுடன் நம்குரு நாதன் நவிலவே-செம்பிது பொன்னாய்ப் புடமாக பொன்னம் பலமாக அன்னான் நடமாடு வான். வான்மின்னல் கீற்றாய் வெயில்நிலவாய் நீர்த்தழலாய் தேன்மெல்ல உள்ளே துளிர்க்குமே-நானென்னும் ஒற்றைஅடை யாளம் உலகெங்கும் தானாக…
சிற்றெறும்புப் பேரணியைசீர்குலைக்க ஒப்பாது சற்றுநின்று பார்க்கின்ற செங்கண் களிறேபோல் சொற்கள் பெருகி சலசலத்தல் பார்த்திருக்கும்… முற்றி முதிர்ந்தமௌ னம்!! நம்நோக்கம் மீறியும் நம்நாக்கு பேசினால் நம்வாக்கு நம்வசம் இல்லையே-தன்போக்காம் காட்டுக் குதிரை கடிவாளம் நீங்கினால்…
காரைக்கால் அம்மைகை கொட்டிக் கவிபாட ஊரைவிட் டோரமாய் ஓமென்று-காரிருளில் தாண்டவம் ஆடும் திருவாலங் காட்டீசன் பூண்டகழல் தானே பொறுப்பு. இமயம் அதிர இமைகள் அசைப்பான் டமருகங் கொட்டிதிசை யெட்டும்-உமையும் இசைந்தாட ஆடும் இறைவனென் நெஞ்சம்…
உடல்சூட்டில் புயலடித்து மழைபொழிந்து போகும் கடல்சூட்டில் கதகதப்பாய் கட்டுமரம் வேகும் மடல்சூட்டில் ரோஜாவின் முன்னிதழ்கள் வாடும் தொடும்சூட்டில் தீப்பிடிக்கும் தண்ணிலவுக் காலம் யாரிட்ட விறகினிலோ யாகத்தின் நெருப்பு வேர்விட்ட மௌனங்கள் விளைகின்ற தகிப்பு போரிட்ட…
இன்று (25.04.2014) இரவு 7.30 மணியளவில் கோவை அருள்மிகு தண்டுமாரியம்மன் கோவிலில் “சகலமும் தருவாள் அபிராமி”என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன்.இரவு 9 மணிக்குள் நிகழ்ச்சி நிறைவு பெறும்…வாய்ப்பிருப்போர் வருகைதர வேண்டுகிறேன்..
“அண்ணா! உங்களை வாணிம்மா கூப்பிடறாங்க”! பல்லாண்டுகளுகளுக்கு முன்னர் ஒரு செப்டம்பர் 23ல் ஈஷா திருநாள் விழாப்பந்தலருகே ஈஷா பிரம்மச்சாரி ஒருவர் அழைத்தார். ஈஷா திருநாளில் “ஷாந்தி உத்ஸவ்”என்ற பெயரில் திருமதி வாணி ஜெயராம் அவர்களின்…
பேயைத்தா யென்பாய் பிடிசாம்பல் பூசுவாய் சேயைப்போய் உண்பாய் சிவக்கொழுந்தே-தீயைப்போய் ஏந்திக் களிப்பாய் எழிலார் அமுதிருக்க மாந்துவாய் நஞ்சை மகிழ்ந்து முப்புரங்கள் உன்சிரிப்பில் முற்றும் எரிந்ததாம் அப்புறமேன் மேரு வளைத்தாய்நீ-இப்படித்தான் பாசக் கயிறுபடப் பாய்ந்துதைத்தாய் இங்கெமது…
அவர்களிடமிருக்கிறது அக்கினிப்பரிட்சையின் கேள்வித்தாள் அவனிடமிருப்பதோ அலைமேல் மிதப்பதற்கான சூத்திரம்…. அவர்களிடமிருக்கிறது ஆயிரம் இரைப்பைகளின் அசுரப்பசி அவனிடமிருப்பதோ ஆதிரை உடைத்த அட்சய பாத்திரம்….. அவர்களிடமிருக்கிறது தேய்த்துத் தேய்ந்த அற்புத விளக்கு அவனிடமிருப்பதோ அந்த பூதத்தின் விருப்ப…
பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது எழுபதில்…