பூமிப்பந்துடன் கொண்டாடு வயல்களில் முளைவிடும் பயிர்களுக்கு வான்தரும் மழைத்துளி விருதாகும்! வியர்வை விதைக்கும் உழவருக்கு விளைச்சல் முழுவதும் விருதாகும்! முயற்சியை நம்பி உழைப்பவர்க்கு முன்னேற்றங்கள் விருதாகும்! துயரங்கள் துடைத்து எழுபவர்க்கு தொடரும் இன்பங்கள் விருதாகும்!…

வாழ்க்கை என்பது நெடுஞ்சாலை வேகத்தடைகளும் இருக்கலாம் போக்குவரத்து நெரிசலை பார்த்துப் போனால் ஜெயிக்கலாம்! பச்சைவிளக்கு தெரிகையில் பயணம் தொடர்ந்தால் நல்லது லட்சியவிளக்கு தொடும்வரை எரிபொருள் மனதில் உள்ளது! எத்தனை பயணிகள் சாலையில்! எல்லோருக்கும் அவசரம்!…

தீக்குச்சி சிறிது தீட்சண்யம் பெரிது திசைகளில் வெளிச்சமிடும்! நோக்கங்கள் சரியாய் உரசிடும் பொழுது நிச்சயம் வெற்றி வரும்! ஆக்கிடப் போகும் ஆயிரம் பணிகளின் பட்டியல் எழுதிவிடு! போக்கிய பொழுதுகள் போனால் போகட்டும் புதிதாய்ப் பிறந்துவிடு!…

கனவுகள் பருகிய கண்களுக்குக் காரிய வீரியம் வரவேண்டும்! மனதினில் மழைவிழும் தருணத்திலே முயற்சியின் விதைகள் எழவேண்டும்! காலத்தின் சுழற்சிகள் நிற்பதில்லை கடுங்குளிர் நடுவே தைபிறக்கும்! வேலைகள் தொடங்கி நடத்துகிற விபரம் இருந்தால் வழிபிறக்கும்! முன்னோர்…

வாழ்க்கை என்பது வார்க்கப்படுவது வேண்டிய விதமாய் வார்த்திடலாம்! சூழ்நிலை எப்படி இருந்தால் என்ன ஜெயிக்க நினைத்தால் ஜெயித்திடலாம் ஏழ்மையும் செல்வமும் தலைவிதியல்ல எதையும் முயன்றால் மாற்றிடலாம்! வாழத் தெரிந்து வாழ்வை நடத்திடு வானம் ஒருநாள்…

வாரியும் கொடுக்கும் வாங்கியும் மறைக்கும் வாழ்க்கையின் கணக்கினை யாரறிவார்? ஆர்வமும் ஆற்றலும் சேர்ந்திடும் வேளையில் ஆயிரம் நலம்வரும் யார்தடுப்பார்? கூரிய நோக்குடன் நீசெல்லும் பாதையில் குறுக்கிடத் துணிந்து யார்வருவார்? வேர்விடும் கனவுக்கு நீர்விடத் துணிந்தால்…

காட்டு மலர்களின் மீதேறி – அதோ காற்றுக் குழந்தையின் ஓட்டமென்ன? கூட்டம் கூட்டமாய் இலைகளெல்லாம் – அதைப் பார்த்து ரசிக்கிற ஆட்டமென்ன? பாதம் பதிகின்ற சுவடின்றி – தன் பாதை எதுவென்ற பயமின்றி மோதிப்…

“நீங்க இப்போ என்ன டயட்டில் இருக்கீங்க? இந்தக் கேள்வி இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது. குறிப்பாக, இணையம் வழியாய் விதம்விதமான வாழ்க்கை முறைகள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பு அனைவருக்குமே இருக்கும் சூழலில், வித்தியாசமான உணவு…

வெளிச்சம் என்பது எழும்போது -அதன் வேலைகள் எல்லாம் தொடங்கிவிடும் ஒளியின் கீற்றுகள் வரும்போதே – இருள் உயிர்ப்பை இழந்து ஒடுங்கிவிடும் துளித்துளியாய் அது பறந்தாலும் – அதன் தீட்சண்யங்கள் தெரிந்துவிடும் ஒளிபோல் நிகழட்டும் உன்…

அன்னையர் மூவர் மூன்று சுடர்களின் ஒருமையிலே-இங்கு மோனம் வளர்க்குது வாழ்வெனும் தீ தோன்றும் கலைகள் செல்வங்கள் -உடன் திகழும் வீரத்தில் ஒளிர்ந்திடும் தீ தேன்துளி சுமக்கிற மொட்டைப்போல்-இந்த தேகத்தின் உள்ளே ஒளிர்கிற தீ நான்மறை…