ஒய்யாரக் கண்களில் மையாடும் சாகசம் ஒருநூறு மின்னல் வனம் வையத்து மாந்தரை வாழ்விக்கும் அற்புதம் வினைதீர்க்கும் அன்னைமனம் கைநீட்டி ஆட்கொளும் கருணையின் உன்னதம் காளியின் சாம்ராஜ்ஜியம் நைகின்ற நெஞ்சோடு நலமெலாம் தந்திடும் நீலியின் நவவைபவம்…
அமுதம் பிறந்த அதேநொடியில்- அட அவளும் பிறந்தாளாம் உமையாள் மகிழும் அண்ணியென- அவள் உள்ளம் மலர்ந்தாளாம் சுமைகள் அகற்றும் கருணையினாள்- நல்ல சுபிட்சம் தருவாளாம் கமலந் தன்னில் அமர்ந்தபடி- நம் கவலைகள் களைவாளாம் மாதவன்…
காலத்தின் மடிகூட சிம்மாசனம்-எங்கள் கவிவேந்தன் கோலோச்சும் மயிலாசனம் கோலங்கள் பலகாட்டும் அருட்காவியம்-அவன் கருத்தினிலே வந்ததெல்லாம் கிருஷ்ணார்ப்பணம் நீலவான் பரப்பிலவன் நாதம்வரும்-நம் நெஞ்சோடு மருந்தாகப் பாடம் தரும் தாலாட்டும் மடியாக தமிழின்சுகம்-இங்கு தந்தவனை கைகூப்பும் எங்கள்…
அவள்மடியில் ஒருவீணை அவள்தந்த ஸ்வரம் பாடும் அவள் விழியில் மலர்கருணை அடியேனின் கவியாகும் அவள் துகிலில் நிறைவெண்மை அது கலையின் மடியாகும் அவள்வரையும் ஒருகோடு அதுகோலம் பலபோடும் வாணியவள் வகுத்தபடி வையமிது சுழல்கிறது பேணியவள்…
விரிவாய் கதைகள் பலபேச-அடி வேறொரு தெய்வம் வாய்ப்பதுண்டோ பரிவாய் கேட்டு பதில்பேச-அந்தப் பரம சிவனுக்கு நேரமுண்டோ திருவாய் மலர்வாள் பராசக்தி-அதில் தீர்ந்து தொலையும் நம்கவலை கருவாய்த் திரண்ட நாள்முதலாய்-நாம் கண்டிருக்கின்றோம் தாயவளை எந்தக் கணமும்…
மண்ணில் முளைக்கும் எதுவும் நீ மனதில் துளிர்க்கும் கவிதை நீ விண்ணின் நீல விரிவில் நீ விடையில் தொடரும் கேள்வி நீ பண்ணில் பொதியும் மௌனம்நீ பரவும் காற்றின் பரிவும்நீ எண்ணில் எல்லாப்…
எங்கோ கேட்கும் காலடி ஓசை ஏதோ சொல்கிறது இங்கும் அங்கும் அதிரும் சலங்கை இரவை ஆள்கிறது குங்கும வாசம் கமழ்கிற திசையில் காட்சி மலர்கிறது அங்கயற் கண்ணி ஆளும் பிரபஞ்சம் அவளால் சுழல்கிறது எத்தனை…
எல்லா சொற்களும் என்முன் வரிசையாய்… நில்லாச் சொற்களும் நங்கூரமிட்டன; பொல்லாச் சொற்கள் பொடிப்பொடி ஆயின; சொல்லாச் சொற்கள் சுரக்கவே யில்லை; பசித்தவன் எதிரில் பந்தி விரித்தும் ரசித்தேன் அன்றி ரணமெதும் இல்லை; முந்திக் கொள்கிற…
(ஈஷாவின் உணவரங்கமான பிக்ஷா ஹாலில் உருவான பாடல்) எனது தந்தை சோறிடுவான் என் சிரசில் நீறிடுவான் என்மனதில் வேர்விடுவான் என்னுடனே அவன் வருவான் காலங்களோ அவனின்புஜம் கவிதைகளோ அவனின் நிஜம் தூலமிது அவனின் வரம்…
வந்தவர் போனவர் வகைதெரியாமல் சொந்தம் பகையின் சுவடறியாமல் சந்தடி ஓசைகள் சிறிதுமில்லாமல் செந்துர ஒளியாய் சந்திரப் பிழிவாய்…… அந்தக் கனவில் அவள்மட்டும் இருந்தாள் செந்நிறப் பட்டில் சூரிய ஜரிகை கண்கள் மூன்றினில் கனிகிற…