நிறம் மாறாத பூக்கள் படம். பாடலுக்கான சூழலை, கவிஞர் கண்ணதாசனிடம் விளக்கினார் இயக்குநர் பாரதிராஜா. “யார் ஹீரோ?” வினவினார் கவிஞர். ‘புதுப்பையன்தாண்ணே! ஒண்ணு ரெண்டு படங்களிலே நடிச்சிருக்கான். “என்றார் பாரதிராஜா. “ஹீரோயின்?” அதுவும் புதுசுதாண்ணே! நம்ம ராதா அண்ணன் பொண்ணு..நான்தான் அறிமுகப்படுத்தினேன். இந்தப்படத்திலே வில்லன் கூட புதுசுதாண்ணே” என்றார். கவிஞர் முகம் மலர்ந்தது. “அடேடே! எல்லாருமே புதுசா! வரட்டும் வரட்டும்! நல்லா வரட்டும்.!” மனங்கனிந்த அவருடைய வாழ்த்து மங்கலமான பல்லவியாகவும் மலர்ந்தது..
தேவன் காவியம்- நீங்களோ..நாங்களோ..நெருங்கி வந்து சொல்லுங்கள்!சொல்லுங்கள்!”
போதிய சம்பாத்தியமில்லாமல் தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிற கணவனுக்கும் மனைவிக்கும் நடுவே நிகழும் மனப்போராட்டங்களைப்பாட இந்தப் பழம்பாடலின் பொறியைப் பல்லவியாக்கியிருப்பார் கவிஞர்
நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே.இதில் நீ-நான், நிலவு-வான் என்று நிரல் நிரையணியை அழகாகப் பயன்படுத்துகிறார் கவிஞர். நான்நிலவுபோலத் தேய்ந்துவ்ந்தேன் நீ வளர்ந்ததாலே. பிரச்சினையின் மையத்தைப் பாடலிலேயேதொட்டுக் காட்டிவிடுகிறார் கவிஞர்.
கவிஞர் அதனை உள்வாங்கிக் கொண்டு,
கண்ணீரில் நீராடக் கடல்தாண்டி வந்தாளே பொன்மங்கை
என்ற சித்தரிப்பு, ஆயிரம் காமராக்களின் காரியத்தைச் செய்துவிடுகிறது.
நிகரில்லா கவிஞர் ……..
அமுத கீதம் பாடியவர் மட்டுமல்ல….அமுத பானம் பருகி வாழ்கையை முழுதாக வாழ்ந்தவர்