‘கழுத்து முதலாகக் கால்வரைக்கும் ஒருசீராய்ப்
என்று இடித்துவிட்டுப் போகிறார் கவிஞர்.
ஆனால் சந்தர்ப்பவாத அரசியல் அவருக்கு சற்றுமில்லை என்பதற்கு அடையாளம், இந்தக் கவிதைகள் எதுவும் காமராஜரை நேராகவோ மறைமுகமாகவோ இடிக்கவில்லை என்பதுதான்.மாறாக இந்திரா காங்கிரஸ்,காமராஜரை மதித்து அவரை முன்னிலைப்படுத்தி தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கவிஞர் விரும்பினார். குணம்நாடி,குற்றமும்நாடினால் காமராஜரிடம்
நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்
என்றெழுதிய கண்ணதாசன், ராஜஜியைப் பாராட்டி எழுதியது இரங்கல் கவிதையில்தான். அது உள்ளத்திலிருந்து எழுந்த உண்மைக் கவிதை என்கிறார் திரு.பழ.கருப்பையா.ஆனால் அத் உபசாரத்திற்காக எழுதப்பட்டதுதான் என்பது என்னுடைய முடிவு. மற்றவர்கள் மறைவுக்காக கவிஞர் எழுதிய இரங்கல் கவிதைகளைப் பார்த்துவிட்டு ராஜாஜியின் மறைவுக்கு அவர் எழுதிய வரிகளையும் பார்த்தால் நான் சொல்ல வருவது விளங்கும். பார்ப்போமே…
rasithan
N.deivasigamani
:-))))