சிரிப்பை , சிரிப்பதற்காகத்தானே பயன்படுத்துவார்கள். சிவபெருமான் எரிப்பதற்காகப் பயன்படுத்தினார். அவருக்கு “நகை ஏவிய ஈசர்” என்ற பட்டத்தை அருணகிரிநாதர் வழங்குகிறார். ஏவுதல் என்பது ஆயுதங்கள் ஏவுவதையும் படைக்கலங்கள் ஏவுவதையும் பெரும்பாலும் குறிக்கும். ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுக்களில்,திருக்கடையூருக்கு, “படை ஏவிய திருக்கடையூர்’என்ற பெயர் காணப்படுகிறது.
சிரிப்பு அவருக்குப் படைக்கலம் ஆகிறது.எதிரிகளுக்குப் படைக்கலம் ஆகிற அதே சிரிப்பு, அடியவர்களுக்கோ அடைக்கலம் ஆகிறது. தில்லைக்குள் வருகிறார் திருநாவுக்கரசர். அலைந்து திரிந்து ஆலயம் சேர்கிறார். தூரத்திலிருந்து பதிகம் பாடியபடி அம்பலத்தை நெருங்குகிறார் திருநாவுக்கரசர். யார் அங்கே வருவது என்று புருவத்தைக் குனித்துப் பார்க்கிறார் சிவபெருமான். திருநாவுக்கரசர் தானா என்று குனித்துப் பார்க்கிறார். நம்முடைய காலமென்றால் வருகை அட்டையை உள்ளே தந்து அனுப்பலாம். திருநாவுக்கரசருக்கு வருகை அட்டையே அவரது வளமான தமிழ்தான். “குனித்த புருவமும்” என்று குரல் கொடுக்கிறார். “ஆஹா! திருநாவுக்கரசர் வந்துவிட்டார்” என்று சிவபெருமானுக்கு ஆனந்தச்சிரிப்பு குமிழியிட்டு வருகிறது.
வெளிப்படும் சிரிப்பை ஒழுங்குபடுத்தி குமிழ்சிரிப்பாக சிரித்த சிவபெருமான், விழுந்து விழுந்து சிரித்ததையும் விவரித்திருக்கிறார் திருநாவுக்கரசர்.
உமையம்மை திரும்பித் திடுக்கிட்ட வேகம் பார்த்து மயில்தான் தன்னைக் கொத்த வருகிறதோ என்று அஞ்சி பாம்பும் பயந்து சற்றே விலகியதாம்.
தன்னை பாம்பு விழுங்க வருவதாய் எண்ணிக் கலங்கிவிட்டது.விண்வெளியில்
திகட்டாத தமிழமுது… சிந்தாமல் சிதறாமல் புகட்டும் திறமிருக்கிறது தங்களுக்கு… 'வாலி கலக்கிட்டாரு' -குமிழ் சிரிப்பு எங்களுக்கும்.