(26.09.2010) மதுரையில் ஈஷாவின் மகாசத்சங்கம். அருகே அழைத்த சத்குரு வாஞ்சையுடன் நலம் வினவி மிகுந்த கனிவுடன் தோள்களில் தட்டிய நொடியில் உள்ளே எதுவோ உடைய, அந்தத் தாக்கத்தில் எழுந்த கவிதை இது:
                தோளில் அவர்கரம் படிந்தது – ஒரு
                 தூரம் உடனே தொலைந்தது
                வாள்போல் பார்வை நுழைந்தது-என்
                 வினையின் வேரொன்று அறுந்தது
               பாதை இருளின் வெளிச்சமாய்-ஒரு
                 பாறை கனமுள்ள அனிச்சமாய்
              ஓதிட முடியா உருக்கமாய்-இங்கே
                 ஒருவரும் தராத நெருக்கமாய்
            பொற்கணம் அருளிய குருவிடம்-என்
                பொல்லா வினைகளை இறக்கினேன்
             அக்கணம் தோன்றிய வெறுமையில்-வான்
                அமுதம் அள்ளிப் பருகினேன்
           கன்றின் இதழ்தொடும் தாய்முலை-எனைக்
               கருணையில் கரைக்கிற மாமலை
           நன்றியில் கண்களும் வான்மழை-என்
                நெஞ்சினில் ஆனந்தத் தேனலை

Comments

  1. தோளில் அவர்கரம் படிந்தது – ஒரு
    தூரம் உடனே தொலைந்தது
    வாள்போல் பார்வை நுழைந்தது-என்
    வினையின் வேரொன்று அறுந்தது

    superb sir………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *