நண்பர்களுடைய இருசக்கர வாகனங்களின் பின்னிருக்கைகள் எனக்காகவே படைக்கப்பட்டிருந்தன. கார்வாங்கும் முன்பே என் மனைவி காரோட்டிப் பழகியிருந்தார். அதுமட்டுமின்றி வீட்டருகே இருக்கும் ஆட்டோக்காரர்கள் கல்லூரிப் பருவத்திலிருந்தே பழக்கம். எனவே வாகனங்கள் ஓட்டிப் பழக வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது. வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை இருந்தது. அதன் உரிமையாளர் ஊனமுற்றவர். அவருடைய மனைவி அவருடன் இருந்து கடையை கவனித்துக் கொண்டிருந்தார் .சில நாட்களுக்குப்பின் அந்தப் பெண்மணி ஆட்டோ ஓட்டுநரானார். கோவையின் முதல் ஆட்டோ பெண் ஓட்டுநர் அவர் என்று நினைவு. ஒரு விபத்தில் அவர் இறந்தபோது ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து தகவல் சொல்லி அனுப்பினார்கள். அந்த அளவுக்கு அவர்கள் பழக்கம். “பத்மா லே அவுட் கடைசி பங்களா” என்று எங்கள் வீட்டுக்கிருந்த அவர்களின் அடையாளச்சொல் மாறி, “புலவர் வீடு” என்று சொல்லத் தொடங்கினார்கள்.ஆட்டோ ஓட்டுநர்களிடம் புலவர் பட்டம் பெற்ற போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.
அங்கே பழைய ஆட்களும் உண்டு. ஆட்டோ ஸ்டாண்டில் ஒரெயொரு வண்டி. அட!ஹெட்மாஸ்டர்!! “சித்தாபுதூர் போங்க!”என்றபடி ஏறி உட்கார்ந்தேன். வண்டி கிளம்பி சில நிமிஷங்களிலேயே செய்தது தவறென்று புரிந்து விட்டது.வண்டிக்கு அவரைவிட வயதாகியிருந்தது.நகரத் தொடங்கியதுமே கண்ணுக்குத் தெரியாத குண்டர்கள் நால்வர் கைகால்களைப் பிடித்து “பிலுபிலு”வென்று உலுக்குவது போலிருந்தது. சாலையிலிருந்த செம்மொழிக்குழிகளில் தடார் தடார் என்று இறங்கி ஏறியது. திருச்சி சாலையிலிருந்து சர்க்யூட் ஹவுஸ் வழியாக அவினாசி சாலை வந்து குப்புசாமி நாயுடு மருத்துவமனை வழியாக சித்தாப்புதூர் செல்ல வேண்டும்.
அவரது முகத்தில் சில வருடங்கள் முன் ஆட்சி செய்த சிடுசிடுப்பைக் காணோம். குளிரில் நடுங்கும் கோழிக்குஞ்சின் இயலாமையும் வாழ்க்கை
நல்லா இருக்குதுங்கண்ணா , நிறைய எழுதுவதில்லை என்பதுதான் குறை
உசுப்பேத்தி உசுப்பேத்தியே
Miga yetharthamaga, neril pesiya unarvu irrunthathu nanbanae.
Pulavar yenru unnai auto otunargal unnudaiya college daysla thaan sonnanga, anna yennakku 13 vasasuleye theringirucchu. thherkatharisi naan.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த (சுடச்சுட) தந்த பதிவு. அவரின் மீட்டரில்லா வாழ்வும், தங்கள் மீட்டருக்கு மேல் போட்டுத் தந்த தயாளமும் நின்றது மனசில். 'செம்மொழிக் குழிகளை' நினைத்து நினைத்து ரசித்தேன்.
ஈசா னிகழ்சியில் நானும் கலந்துகொண்டேன். விரைவான , துய மொழிபெயர்ப்பு, அதுவும் நீண்ட பேச்சுக்களுக்கு.
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே
superb