Sadguru |
பல்லவி
உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன்
உன்னை வைக்கத்தான்
வெள்ளம் போலே நீநுழைந்தாய்
நானும் மூழ்கத்தான்
கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே
கண்ணெதிர் வருகிற கனவே கனவே
எல்லை இல்லா இன்பம் இங்கே
உன்பேர் சொல்லித்தான்
சத்குரு பாதங்கள் சரணடைந்தேன்
சருகெனப் போனவன் உயிர்மலர்ந்தேன்
சரணம் 1
எத்தனை பிறவிகள் என்னைச் சுமந்தே
எல்லாத் திசையிலும் நடந்தேனோ
எத்தனை தவங்கள் எப்படிச் செய்தேன்
எவ்விதம் உன்னை அடைந்தேனோ
மூச்சினில் கலந்தது உன்கருணை
பேச்சினில் வருவது உன்கவிதை
காட்சியில் தெரிவதும் கணத்தினில் மறைவதும்
கேட்டதைத் தருவதும் உன்மகிமை
சரணம் 2
ஆசையின் முதுகில் ஆயிரம் காதம்
ஆடிக் குலுங்கிய பயணமோ
பாசத்தில் வழுக்கி பள்ளத்தில் சறுக்கி
போனதும் எத்தனை தூரமோ
பாதையின் முடிவில் உனதுமுகம்
பார்த்ததும் தெளிந்தது எனதுமனம்
நாதத்தின் நடுவில் ஞானத்தின் மௌனம்
நிகழ்ந்ததில் தொலைந்தது வினையின் கனம்
ஆசையின் முதுகில் ஆயிரம் காதம்ஆடிக் குலுங்கிய பயணமோபாசத்தில் வழுக்கி பள்ளத்தில் சறுக்கிபோனதும் எத்தனை தூரமோபாதையின் முடிவில் உனதுமுகம்பார்த்ததும் தெளிந்தது எனதுமனம்நாதத்தின் நடுவில் ஞானத்தின் மௌனம்நிகழ்ந்ததில் தொலைந்தது வினையின் கனம்//
குருவே சரணம்!
really superb anna 🙂
பக்தியினால் வந்து விழுந்த வைர வரிகள்
பாய்ந்து வந்த பயமும் ஓடிடும் குதிரைகள்
பரவச நிலைக்கு நம்மை இட்டுச் செல்லும் இன்ப நதிகள்
thank you ji
Anna, After hearing the song on Alai with music. The Song pulls me like a magnet. Listening the whole song again and again. No words to express the simple yet profound lyrics. Thanks anna for such an wonderful flow of rhyming lyrics.