யாருடைய உதவியுமின்றி நிற்பதும் நடப்பதும் கூட ஆச்சரியமில்லை.மிகுந்த தெளிவும் நுணுக்கமும் தேவைப்படும் பங்கு வர்த்தகத்தில் இன்றளவும் அவர் உற்சாகத்துடன் ஈடுபடுகிறார்.
புதிய கட்டிடங்களின் திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம்,தியாகராசர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கருமுத்து.திரு.தி.கண்ணன்,
கோவை பாரதீய வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர்,ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.
மூத்த புதல்வர் திரு.பி.எல்.சுப்பிரமணியம் |
நூறாண்டுகள் வாழும் ஒருவரைக் காணச் செல்கையில் என்ன சொல்வது என்பதற்கு வைணவ மரபில் ஒரு வார்த்தை உண்டு.வடகலை மரபில் வேதாந்த தேசிகரும் தென்கலை மரபில் மணவாள மாமுனியும் நூறாண்டுகள் வாழ்ந்தனர். அவர்களைக் காணச் சென்றவர்கள் “இன்னுமொரு நூற்றாண்டு இரும்” என்று வணங்கிக் கூறினர்.
மாநகரின் மாறன் மறைவாழ-ஞானியர்கள்
சென்னியணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே!
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ-கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னமொரு நூற்றாண் டிரும்”
திரு.பழனியப்பச் செட்டியார் குடும்பத்தினர் |
இந்தப் பரபரப்பான யுகத்திலும் நெறியான வாழ்வாலும் சரியான மனப்பான்மையினாலும் வாழ்வாங்கு வாழ முடியும் என்ப்தை உணர்த்தும் பெரியவர் திரு.பழனியப்பச் செட்டியார் அவர்கள் போற்றத்தக்கவர் மட்டுமல்ல…பின்பற்றத்தக்கவரும் கூட.