மொரீஷியஸ் தீவு எரிமலையின் எச்சம்.அரிய வகை தாவரங்களும் பறவைகளும் மொரீஷியஸில் தோன்றின. அவற்றில் ஒன்றுதான் பழுப்புநிற டோடோ.வெவ்வேறு நாடுகளிலிருந்து அடிமைகளும் புலம் பெயர்ந்தோரும் மொரீஷியஸில் குடியேறினர்.
டச்சு நாட்டுக்காரர்களின் வளர்ப்பு மிருகங்களால் பெரும் தொந்தரவுகள் ஏற்பட்டன. நாய்களும் பன்றிகளும் அதுவரை மொரீஷியஸில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த கால்நடைகளையும் மான்களையும் துன்புறுத்தின.
டச்சு நாட்டுக்காரர்களின் ஆக்கிரமிப்பு படிப்படியாக சுற்றுxச்சூழல் அழிவுக்குக் காரணமானது.அவர்கள் டோடோ பறவை பற்றி கிண்டலும் கேலியுமான குறிப்புகளையும் சித்திரங்களையும் பதிவு செய்திருந்தார்கள்.உடல் கனமும் குறைவான சிறகுகளும் கொண்டு மிக மெதுவாக நகர்கிற அசட்டுப் பறவை” என்பது அவர்களின் பதிவு.
டோடோ புறா இனத்தைச் சேர்ந்த பறவை .இலட்சக்கணகான ஆண்டுகளுக்கு முன்னர் மொரீஷியஸுக்கு வந்ததென்றும் அதனால் தன் அலகுகளில் பாறைகளையே சுமக்க வல்லதென்றும் சொல்லப்படுகிறது.
ஒரு பறவை பறப்பதற்கான அவசியம் அதற்கான அச்சுறுத்தல்களின் அடிப்படையிலேயே நிகழ்கிறது.அந்த வகையில் பாதுகாப்பான சூழலில் பறக்கவே தேவையில்லாமல் டோடோக்கள் வளர்ந்தன. சாஸ்திரத்துக்காக,குறைந்தபட்ச சிறகுகளோடும் கூடுதல் எடையோடும் வளர்ந்து வந்த பறவை டோடோ.இந்தப் பெயரே டச்சுக்காரர்களால் சூட்டப்பட்டதென்றும் போர்ச்சுகீசிய மொழியில் அதற்கு “அசடு” என்று பொருளென்றும் சொல்லப்படுக்கிறது.
புற்களாலும் பனையோலைகளாலும் கூடுகட்டும் டோடோ, உணவு ஏராளமாகக் கிடைக்கும் காலமான மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.”ஒண்ணே ஒண்ணு,கண்ணே கண்ணு “என ஒரேயொரு முட்டை வைக்கும். முட்டைக்கருகே ஒரு வெள்ளைக் கல்லையும் வைக்குமாம். (கல்லுமுட்டை என்ற சொல் இப்படித்தான் வந்திருக்குமோ)இதற்குக் காரணம் பறவைகள் வாஸ்து சாஸ்திரமோ பட்சிகள் ராசிக்கல் ஜோசியமோ அல்ல.
டிசம்பர் 2ஆம் பிரெஞ்சுப் படை அனுப்பிய சமாதான உடன்படிக்கையைபிரிட்டிஷ் படை நிராகரித்தது.டிசம்பர் 3ஆம் தேதி தன் ஆளுகைக்குள் மொரீஷியஸைக் கொண்டு வந்ததன் மூலம் இந்தியப் பெருங்கடலின் 73,426,000 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கடல்பரப்பு பிரிட்டிஷ் ஆளுகைக்குள் வந்தது.
மொரீஷியஸின் சுதந்திரத்திற்கு என் வயது. அதுவும் 1968 ல்தான் பிறந்தது.சுதந்திரம் பெற்ற மொரீஷியஸின் முதல் பிரதமராக ஸீவோஸாகூர் ராம்கூலம் பொறுப்பேற்றார். அடுத்து பிரதமரானவர்தான் கடந்த அத்தியாயத்தில் நாம் சந்தித்த இப்போதைய பிரதமர்.
( தொடர்வோம்)