தைப்பூசம் முடிந்துஒருநாள் இடைவெளிக்குப் பின் மகாத்மா காந்தி நிறுவனத்தில் நான் உரை நிகழ்த்த வேண்டும்.அந்த நாளை அனைவருமே வெகு ஆவலாய் எதிர்பார்த்திருந்தனர்.ஏதோ என்னுடைய உரைக்காக அப்படி காத்திருந்தனர் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.மொரீஷியஸில் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தைப்பூசத்திற்காக நெடுநாட்கள் நோன்பு நோற்கின்றனர்.
மொரீஷியஸ் நாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருடன்

அந்த நோன்பை அவர்கள் நிறைவு செய்வது கொடியிறக்கத்திற்குப் பின்புதான் என்பதால் அந்தநாள் அவ்வளவு முக்கியம்.அந்த நாளும் வந்தது.ச்னிக்கிழமை காலை 10.30 மணி.மொரீஷியஸ் நாட்டின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமைதாங்கினார்.பேராசிரியை மகேஸ்வரி அழகிரி வரவேற்புரை நிகழ்த்த முனைவர் ஜீவேந்திரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.Thirukural and Spirituality என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன்

.திருவள்ளுவர் இன்ன சமயத்தினர் என்று பலரும் பலவாகச் சொன்னாலும் அவர் சமயம் கடந்த ஆன்மீகத்தையே முன்வைத்தார். ஒரு நாட்டின் பிரதேசச் சார்போ மொழிச் சார்போ ஆள்வோர் சார்பு நிலைப்பாடோ சமய நிலைப்பாடோ இல்லாத உலகப் பொதுமை திருக்குறளின்  அதி முக்கிய அம்சம் என்பதை சுட்டிக்காட்டி,அதற்கு சான்றாக கவிஞர் சிற்பி அவர்களின் கவிதை வரிகளை மொழிபெயர்த்து மேற்கோள் காட்டினேன்.
உரையரங்கில்…

Thirukural written by Thiruvalluvar is not just a literary piece.It is the essence of human consciousness.It sees each and every aspect of human life with utmost clarity and presents unshakable solutions for the problems faced by  humanity.Spirituality is the manifestation of supreme consciousness in each living being.Though spirituality uses religions as a vehicle,in a broader sense spirituality is beyond all religions,castes and creed.Similarly Thirukural is aptly known as “Ulaga Podhumarai” which means it is an Universal doctrine.Though written in Tamil Thirukural beholds an Universal outlook .I would like to quote a famous Tamil Poet and scholar,Dr.Sirpi Balasubramaniam,who has beautifully narrated this in his poem.I will first share its translation.It says

“Though written in the language of Tamilians,it does not refers to any kingThough it has couplets of prayer,it does not denote any particular God
it does not refer to any rituals or religious practices,as Thirukural rises up as the conscience of the whole humanity.
To quote

“செந்தமிழ் நாட்டின் மொழியிலெழுந்தும்

மன்னவர் பெயரில்லை

தெய்வ வணக்கப் பாடல் சொல்லியும்

திருப்பேர் தரவில்லை

மந்திரம் சடங்கு சமயங்களில்லை

காரணம் ஏதென்றால்

மனித குலத்தின் மனச்சான்றாக

மலர்ந்தது வள்ளுவர் நூல்”

கவிஞர் சிற்பி

திருக்குறள் உலகப் பொதுத்தன்மை வாய்ந்ததென்றாலும் அது ஒவ்வொரு தனிமனிதனிடமும் தோள்தொட்டுப் பேசும் அந்தரங்கமான நூல்.திருவள்ளுவர் தன்னந்தனியாய் தன்னுடன் உட்கார்ந்து உரையாடுவதாய் வாசகர்கள் உணர முடியும்.இந்த பிரத்யேக வழிகாட்டுதல் ஆன்மீகத்தின் முக்கியமான அம்சம்.திருக்குறளின் தனித்தன்மையும் இதுவே.இதையும் கவிஞர் சிற்பியின் கவிதை வரிகளுடன் மேற்கோள் காட்டினேன்.

he power of spirituality lies in its adaptability.A person can see spirituality as a tool to elevate himself or herself even without any religious affiliation.The solace and comfort which spirituality offers at the time of setbacks not only helps a person to bounce back to normality but also provides a clarity about life.To again quote Dr.Sirpi his poetry describes how an individual comes in terms with Thirukural.This is something very similar to spirituality.The translation first

“:If i go through a set back or something sad takes place at home
If my heart burns in the fire of grief
The old man Thiruvalluvar comes in my mind
Asks me to rise up,to wipe my tears and cheer up

To quote

“எனக்கொரு நோயும் மனைக்கொரு தீங்கும்
இழவும் வீழ்ச்சிகளும்
இதயத்தின் அடியில் துயரத்தின் நெருப்பும்
எரிந்து கரிந்திடுமேல்
மனத்தினில் வள்ளுவ முதுமகன் வருவான்
மகனே சிரியென்பான்
விழிகளின் கண்ணீர் மாற்றுக என்பான்
துணிவாய் எழு என்பான்”
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்னும் முதல் குறளில் “அ” எப்படி இறைவனுக்குச் சமம் என்பதையும் விளக்கினேன். மேலே ஒரு சுழியுடன் உந்தியெழும் எழுத்து மேலே போன வேகத்தில் கீழே இறங்குகிறது.தரையைத் தொட்ட பின் நிதானமாக மீண்டும் மேலெழுகிறது. இப்போது சமநிலையோடு செங்குத்தாகத் திரும்பி தனித்திருக்கும் கோட்டில் சேர்ந்து முடிகிறது.
இது மனித வாழ்வின் குறியீடு. மேலே போகிற மனிதன் அகங்காரத்தால் உந்தியெழுகிறான்.அதே வேகத்தில் கீழே வருகிறான்.இப்போது அனுபவமும் நிதானமும் அவனை மருபடி மேலே உயர்த்துகிறது. சமநிலையோடு வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து உண்மையைத் தேடிப் போகிறான். நேர்க்குத்தாக தனித்திருக்கும் கோடு கடவுளின் குறியீடு.அதனுடன் மனிதன் சென்று கலக்கிறான்.

Though there are ten couplets in Thirukural which are captioned as prayer songs they do not glorify God.These ten couplets are ten formulas for a person to bring in Godliness into himself or herself.The very first couplet draws a synonym between God and  the first letter in Tamil அ.

The couplet says as the alphabets start with a the beginning of the world is God,the firat and foremost entity.Now it has a deeper meaning.The Tamil letter a is not just a letter.It is not just a linguistic form.This first letter is the first component of the pranava mantra aum.Now just watch the formation of the alphabet அ.

It begins with a curve and raises up.later it descends to the bottom.Then it raises up again.From there it moves as a horizontal line and merges with a line which stands all alone and tall.Now what does this signify?This shows the graph of the human life.A person gets equipped and goes up in life.Once  growth happens ego takes the lead and immediately the person comes down.After the downfall,a kind of clarity descends and again the person goes up.Now there are no ups and downs.Instead of trying to win the soul goes in search of its own source.The straight horizontal line denotes this search.Once this search is intense the soul finds God standing alone and merges with it.
This is the significance of the letter அ.

அவையினர் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டேயிருந்தனர். புலால் மறுத்தல் பற்றி விலாவாரியாகப் பேசத் தொடங்கியதும் அதிர்ந்தனர். அடுத்த நாள் விரதம் முடிக்கப் போகிறவர்களல்லவா பாவம். அவையின் ஏகோபித்த ஆதரவையொட்டி அதற்கடுத்த திங்கள் மகாத்மா காந்தி நிறுவனத்தின் பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த என் உரையினை பொதுமக்களுக்கான நிகழ்ச்சியாக மாற்றி அறிவித்தார், மகாத்மா காந்தி நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் பிஜய மதாவ். மகாத்மா காந்தி நிறுவனத்தின் இயக்குநர் திருமதி விதோத்மா கூஞ்சல் மகாத்மா காந்தி நிறுவன  நூல்களைப்பரிசளிக்க, அந்நிறுவனத்திற்கு என் நூல்களைப் பரிசளித்தேன்
மேலும் இரண்டு நாட்கள் .மொரீஷியஸின் ஞாயிற்றுக்கிழமையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருந்தேன்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *