ஆனால் மகாபாரதம் ஒழுங்கின்மைகளின் கருவூலம். ஆதி பருவம் தொடங்கி வேறெங்கும் கேள்வியுறாத உறவுமுறைகளும் பிள்ளைப்பேறுகளும் நிகழ்களம்.அதிலும் மேலோட்டமாகக் காணும்போது புலப்படாத அம்சங்களையும்,பல நிகழ்வுகளைப் பின்னின்றியக்கும் உளவியல் நுட்பங்களையும் முதற்கனல் ஒளிபாய்ச்சிக் காட்டுகிறது.
சௌப நாட்டிலிருந்து காசி நோக்கிச் செல்லும் அம்பை,தாய்வீடு தன்னைத் தள்ளாதென்ற நம்பிக்கையுடன் படகை விட்டிறங்குகிறாள்.ஆனால் அது தந்தை ஆள்கிற நாடென்பதை மறந்துவிட்டிருந்தாள்.”அஸ்தினபு
அடுத்த நாட்டுக்கு மணமாகிப் போன இளவரசி தந்தையின் நாட்டுக்கு வருவதற்கான விதிமுறைகளை அமைச்சர் ஃபால்குனர் வேறு வழியில்லாமல் உயிரற்ற சொற்களில் சொன்னார் என்று ஜெயமோகன் எழுதினாலும் அந்த விதிமுறைகள் சுவாரசியமாயிருக்கின்றன.
அப்போது விருஷ்டி தரும் விளக்கம் அபாரமானது.”காதல்கொண்ட ஒருவனைத் தேடிச் செல்லும்போது உள்ளூர இன்னோர் ஆணை என்னும் கீழ்மகளா நான்”என அம்பை கொதிக்கும்போது விருஷ்டி சொல்கிறாள்,”இல்லை.நீ ஒரு பெண்.உன் கருப்பை ஆசை கொண்டது.தீராத்தனிமையுடன் நின்றிருந்த மாவீரனைக் கண்டதும்,அவன் முன் மண்டியிடவும்,உன்னுடன் இணைத்துக் கொண்டு அவனை ஒரு குழந்தையாகப் பெற்று மடியில் போட்டுக் கொள்ளவும் அது விழைந்தது.அதுவே இப்பூவுலகை உண்டாக்கி நிலைநிறுத்தும் இச்சை.நான் அதன் தேவதை என்றாள் விருஷ்டி.”(ப-151)
அப்போது நிருதனின் படகிலேறிய அம்பைக்கு நிருதனின் பணிவும் நேயமும் பக்தியும் பெரும் ஆறுதலாய் அமைகிறது.
சால்வனைத் தேடிச் செல்லும் வேளையில் அம்பையின் மனநிலை எப்படி இருந்தது என்பதற்கு ஜெயமோகன் ஓர் உவமை சொல்கிறார்.”பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசை வெளியில் அலையும் அடையாளம் காணப்படாத கோளத்தைப் போலத் தன்னை உணர்ந்தாள்”(ப-137)