அதிசயமாய் தனித்திருக்கும் ஒற்றை மரத்தின்
இலைகளில் உறங்கும் காற்றை எழுப்பிவிட்டேன்
புயல் ஓய்ந்து
மழை நனைத்துக்
குளிர்ந்துகிடக்கும் நிலத்தில்
ஒற்றைச் சுடருடன் நிற்கிறேன்”
பழமையின் மரங்கள் சூழ்ந்திருந்த மைதானத்தில்
சுலுந்தங்குச்சிகளில் பந்தங்கள் எரியத் துவங்கின
இலவம் வெடித்திருக்க
விரியக் காத்திருக்கும் கோங்கம் பூக்களின்
குவிந்த இதழினுள் தாது அடர்ந்திருக்க
புற இதழ் கருத்த தூய வெண்பாதிரி பூக்கள் வாசம் பரப்ப
அப்போதுதான் மலரத்துவங்கும்
செங்காந்தள் மலர்க்கொடியை தன்மேல் படரவிட்டிருந்த அவன்
அவளைத் தேர்ந்திருந்தான்
அவளின் இமைகள் கிறங்கிக் கிடக்க
மதனமேடையில் நடனமாடத் துவங்கினான்
மூங்கில் காடுகளில் புகுந்தசைந்த காற்றால்
அவளை இசைத்தான்
வனத்தின் அசைவும்
காட்டாற்றின் ஓசையும்
பறவைகளின் சிறகடிப்பும்
இயைந்திட
உடல் ஆடினான்
இருள்
அவனது நடன அதிர்வில்
வெளிச்சமென பெருக
சுலுந்தங்குச்சி நெருப்பாய் அவன்
முன்னும் பின்னும் அசைந்த காலத்தில்
காய்ந்த மரத்தின் உதிர்ந்த செம்பூவென பற்றியெழுந்தாள்
வெடித்த இலவம் காற்றில் மிதந்து கடந்து
புராதன வேர்களை பரப்பியது நிலமெங்கும்
காலத்தை
நெருப்பின்வழி கடக்கும்போது
நடுநிசிக் கிளைகளில் பறவைகள் மறைந்தன.”
“செந்தழல் நடுவிலிருந்து உண்டாகும் சொற்களை
செழித்திருந்த கரும்புத் தோட்டத்தைப் பார்க்கிறேன்
ஒரு துண்டு கரும்பில்
பற்றி எறியும் தீச் சுடரைக் கண்டேன்
தீயின் சுவை கண்டேன்”
நகர்வதற்கான ஒரு பாதை
இந்த நிலத்தில்
இந்த வானத்தில் இல்லை
பாதைகள் நேராகச் செல்லும்
வளைந்து வளைந்து செல்லும்
சட்டென்று இடது புறமாகவோ
பட்டென்று வலது புறமாகவோ
அல்லது
திரும்பிச் செல்வது போலவோ
பாதைகளின் பாதை இருக்கின்றன
ஒருபோதும்
இவ்விதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல
நெருப்பென்னும் தீ
கசடுகளை
ஒவ்வாதவைகளை
தீமைகளை
இன்னும் பலவற்றை
தேவதையெனச் சுற்றித் திரியும்
கொடிச்சி ஒருத்தி
குறிஞ்சி நிலமெங்கும் காட்டுப்பூக்களை
பறித்துச் சேகரித்துக் கொண்டிருந்தாள்
நீலமணிப் பூக்கள் சூட்டியிருந்த
கூந்தலை படர்த்தி நடக்கிறாள் வனமெங்கும்
மலையின் அடிவாரத்திலிருந்து
காற்றுடன் கலந்து பரவிய
நடவுப் பாடலின் வரிகளில்
லயித்திருந்தாள்
வயல்மேல் பறக்கும் குருவிகள்
சேகரித்த தானியங்களை
குஞ்சுப் பறவைகளுக்கு கொண்டு செல்கின்றன
மலைப்பாதையில்
தெரிகிற நிழலுருவம் கண்டு
ஏமாறுகிற கொடிச்சி
கூடை நிரம்பிய பூக்களுடன் வீடு திரும்புகிறாள்.”
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறாள்
காற்றைப் பருகுபவளாகவும்
காற்றைப் பருகத் தருபவளாகவும்.”
பனிக்காலம்
ஒன்றும் இல்லை அவளுக்கு
எப்போதுமே அடர்ந்திருகின்றதென
ஆதிவாசனையை வியர்வையென
உணர்ந்த கணத்தில் நினைத்துக்கொண்டாள் “ என்றும்,
“ஏப்ரல் மாதத்தின் வெம்மை
மொழிபெயர்க்கும் விருப்பத்துடன்
அந்நியர்களும் உணர்ந்துகொள்ளும்படி
எங்கும் படர்ந்திருக்கிறது. “
*
வெண்மேகம்போல மென்மை போர்த்துகிறது
முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது.
மேகங்கள் நகர்வதாய் இல்லை
மேக நிழலில்
மனிதர்கள்
விலங்குகள்
கட்டடங்கள்
எல்லாம் மகிழ்ந்து கொண்டிருக்கிறபொழுதில்
வெயிலின் கண்களிலிருந்து
இரண்டு சொட்டு கண்ணீர்த்துளிகள் விழுகிறது
விழுந்து கொண்டேயிருக்கிறது
அதைப் பார்த்துக் கொண்டிருந்த காற்று
மேகத்தை விலக்க முயற்சிக்க
நிலவு
மேற்கில் உதிக்கிறது
வெயிலின் கண்ணீர்த் துளிகள்
மேகத்தில் படவும் இல்லை
நிலம் புகவும் இல்லை”