கவியரசர் கண்ணதாசன் மறைந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு கவியரசர் கண்ணதாசன் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். சகோதரர் காந்தி கண்ணதாசன், கவிஞரின் புத்தக அடுக்கினைக் காட்டினார். எல்லாப்புத்தகங்களும் நேர்வசத்தில் அடுக்கப்பட்டிருக்க, அந்தப் புத்தகங்களின் மேல் ஒரேயொரு புத்தகம் படுக்கை வசத்தில் இருந்தது. கெட்டி அட்டையிடப்பட்ட அந்தப் புத்தகத்தை கையிலெடுத்துப் புரட்டினேன். காஞ்சி மகாபெரியவரின் “தெய்வத்தின் குரல்”.
அதன் முதல் பக்கத்தில்,”இது என்னுடைய புத்தகம். இதை யாரும் இரவல் கேட்கக் கூடாது. அன்பன்,கண்ணதாசன்”என்று எழுதிக் கையொப்பமிட்டிருந்தார் கவிஞர். அவர் அடிக்கடி அந்தப் புத்தகத்தில் லயிப்பாராம்.
சைவப் பாரம்பரியமுள்ள செட்டிநாட்டுக் குடும்பத்தில் பிறந்து, சிறிது காலம் நாட்திக இயக்கத்தில் இருந்து, மீண்டும் பக்திநெறியிலே கலந்து ஆன்மீகத்தின் சாரத்தைத் தன் எழுத்துகளில் வடித்துக் கொடுத்த கவியரசு கண்ணதாசன், சமணத்திலிருந்து மீண்டபின்னும் சென்ற காலங்களை எண்ணி வருந்திய திருநாவுக்கரசர் போல் தன் வருத்தத்தையும் ஆங்காங்கே பதிவு செய்கிறார்.
“நல்லறிவை உந்தனருள் தந்ததென எண்ணாமல்
நாத்திகம் பேசிநின்றேன்
நடைபயிலும் சிறுவனொரு கடைவைத்த பாவனையில்
நாற்புறம் முழக்கி வந்தேன்
கல்வியறிவு அற்றதொரு பிள்ளையிடம் நீகொடுத்த
கடலையும் வற்றவிட்டேன்
கருணைமயிலே உன் நினைவுவரக் கண்டதன்பின்
கடலையும் மீறிநின்றேன்”
என்பது, சிறுகூடல்பட்டி மலையரசி அம்மையிடம் அவர் கொடுத்த வாக்குமூலம்.
அர்த்தமுள்ள இந்து மதம் எழுதப்போந்த அவரின் ஆன்மீகப் பயணம், தன் சிற்றூரின் தெய்வமாகக் குடியிருக்கும் மலையரசி அம்மையின் மலர்த்தாள்கள் பற்றித் தொடங்கியது.
“காட்டு வழிதனிலே-அண்ணே
கள்வர் பயமிருந்தால்
வீட்டுக் குலதெய்வம்-நம்
வீரம்மை காக்குமடா” என்ற பாரதியின் வரிகளை மெய்ப்பிப்பது போல்,பொதுவாழ்வில் கள்வர்கள் நடுவே பயணம் போன கவிஞரை அந்தத் தெய்வம் காத்தது.
சித்தர் பாடல்களையும் திருமுறைகளையும் தோய்வுடன் கற்ற கவிஞருக்கு ஆதிசங்கரர் மேல் ஏற்பட்ட ஈடுபாட்டின் வேர் இன்னதென்று விளங்கவில்லை.ஆனால் ஆதி சங்கரர் அருளிச் செய்த சில நூல்களைத் தமிழில் எழுதும் அளவு அவரின் ஈடுபாடு வளர்ந்தது.
கனகதாரா ஸ்தோத்திரத்தை பொன்மழை என்ற பெயரில் தமிழ் செய்தார் கவிஞர்.இன்றளவும் பலராலும் அந்நூல் பாராயணம் செய்யப்படுகிறது.
மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி
மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்
நீலமா மேகம்போல நிற்கின்ற திருமால் உந்தன்
நேயத்தால் மெய்சிலிர்த்து நிகரிலாச் செல்வம் கொண்டான்
மாலவன் மீதுவைத்த மாயப்பொன் விழியிரண்டை
மாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்
காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுக்
கண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத்தாயே”
என்பது அந்தத் தொகையின் முதல்பாடல்.
ஆதிசங்கரர் பல்வேறு பாஷ்யங்களை அருளியிருந்தாலும் பக்தி நெறியிலும் தத்துவநெறியிலும் அவரின் பங்களிப்புகளில் பெயர் பெற்றது,பஜகோவிந்தம்.அந்த சுலோகங்களை அருளியல் கொஞ்சும் அழகிய தமிழில் வடித்தளித்தார் கவிஞர்.
“பஜகோவிந்தம் பஜகோவிந்தம்
பஜகோவிந்தம் மூட மதே
கண்ணதாசனின் பஜ கோவிந்தமும் கனக தாரா தோத்திரமும்
தமிழ் இலக்கிய பொக்கிஷங்கள்.
படித்து படித்து பேரின்பம் பெற வழி வகுக்கும் நன்னூல்கள்.
அவற்றிற்கு ஒரு சிறப்பென முத்தான ஒரு பதிவிட்ட
தங்களுக்கு நன்றி.
சுப்பு தாத்தா.
பஜகோவிந்தம்
ஐயா, அந்த புத்தகத்தின் பெயர் தெரிவிக்க முடியுமா?
ஐயா, கவியரசரின் தாசர்கள் யாரேனும் உள்ளீர்களா?
அருமை.. கவியரசர் எதையும் புரிந்து எழுதுவதில் வல்லவர். கண்ணதாசன் பெயரே சும்மா விளையாட்டகத்தான் வைத்தேன் என்றார். பின்னர் இதையா , கோதை யா குழப்பத்தில் கோதையின் ஆன்மீகக்காதல் ஈர்த்தது. அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினவர் ..மறுபடியும் தத்துவப் பொருளில் வந்து நின்றதைத்தான் இது காட்டுகிறது. அவரின் எழுத்துக்களில் பல கோணங்கள் நம் ஆத்மார்த்த சிந்தனைக்கு விருந்தாவனவே. நன்றி.