பதின் வயதுகளின் பரவசம் கடந்து இருபதுகளின் நிதர்சனம் நுழைந்து முதிரும் பக்குவத்தின் முப்பதுகளில் வாழும் வாழ்க்கை வலிகளும் வரங்களும் விளைகிறபருவம்.
கற்று வந்த கல்வியின் நிமிர்வுகளை எல்லாம் பெற்று வரும் அனுபவங்கள் புரட்டிப் போடுகிற பருவம்.சின்னச் சின்ன சம்பவங்கள் வழியே ,வாழ்க்கை தன் உண்மையான முகத்தை உணர்த்தும் தருணம்.
எதிர்பாராத அனுபவங்களை எதிர்கொள்ள நேர்பவர்கள் இருவேறு விதங்களில் எதிர்கொள்வார்கள். ஒன்று,நிகழ்வதை திறந்த மனதுடன் எதிர்கொண்டு அதனை வாழ்க்கை தரும் அறிவுறுத்தலாய்,அறிந்து கொள்ள வேண்டிய அனுபவமாய் ஏற்பார்கள்.
அல்லது,இந்த வாழ்க்கை மிரட்சி தருவதாய் பயந்து தங்களைத் தாங்களே சுருக்கிக் கொள்வார்கள்.
உண்மையில் உங்களுக்குள் இருக்கும் உண்மையான திறன்களை வெளிக் கொணரும் வாய்ப்பாகவே வாழ்க்கை பலநேரங்களில் தன் உண்மை முகத்தை உணர்த்துகிறது. வாழ்வின் போக்கறிந்து வருவதை எதிர்கொள்ளும் பக்குவத்தை முப்பதுகளில் இருந்து முனைப்புடன் வளர்ப்பவர்கள்,மிக விரைவில் மிகப் பெரிய உயரங்களை அடைவார்கள்.
தாழ்வுகள் தாண்டி தலைநிமிர்ந்திடுக!தடையெதும் நிலையில்லை
வலிகள் சொல்லாது