சிற்சில பதவிகளுக்கென்று சில தகுதிகள் உண்டு.ஆனால் முன் தகுதி எதுவுமே இன்றி இருந்தாலும் பக்தி இருந்தால் இறைவனுடைய கருணை ஆட்கொண்டு விடுகிறது.”சிவன் பஞ்ச பூதங்களிலும் நிறைந்து நிற்கிறான்.அவன் எங்கும் இருப்பவன் என்பதால் செல்வதோ வருவதோ இல்லை’ என்பதை பாடல்களாகக் கேட்டதன்றி இறைவனைக் கண்டறிந்தவர் பற்றிக் கேட்டறியக்கூட இல்லை.
தகுதிகள் இவ்வளவு குறைவாய் இருப்பினும் மிகுதியான கருணை கொன்ட இறைவன், தம்மை அறிந்தவர்களைக் கூட அறியாதார் முன்பு தாமாக வெளிப்பட்டு ,அவர்தம் குறைகளைக் களைந்து தாமாக ஆட்கொள்கிறான் எனில் அவன் கருணை எத்தகையது ” என்று வியக்கிறார்
பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால்
போக்கிலன் வரவிலன்” என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச்
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா !
சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !
மனம் தொடும் படி உறைத்தீர்கள் .. நன்றி!