தேர்வில் வெல்ல விரும்பும் மாணவர்களைப் பாருங்கள்.பொழுது போக்குகள்,கேளிக்கைகள் எதிலும் ஈடுபடாமல்
படிப்பிலேயே கவனமாயிருப்பார்கள். இவர்களே இப்படியென்றால் முக்தியை நினைக்கும் அடியார்கள் எப்படி இருப்பார்கள்?
“பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்” என்கிறார் மாணிக்கவாசகர்.
“பப்பற” என்றால் மனதை வேறெங்கும் செலுத்தாமல் என்று பொருள். அவர்கள், ஒரு பெண் தன்காதலன் மேல் எவ்வளவு
அர்ப்பணிப்புணர்வுடனிருப்பாளோ அது போன்ற இயல்பில் இருக்கிறார்கள்.அவ்வளவு தீவிரமாக இறைத்தேடலை வகுத்துக் கொண்டவர்கள் போல் தவமோ உறுதியோ இல்லையென்றாலும்,என் பிறவி நோயை அறுத்து ஆட்கொள்ளும் பெருமானே பள்ளி எழுந்தருளாய்” என்று பாடுகிறார்.
பழாடியார் மீதான பெருவியப்பு இப்பாடலில் மீண்டும் பதிவாகிறது
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின்
வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா !
செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே !
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே !