மூவராலும் தேவராலும் அறிய முடியாத சிவபெருமான் தன் பாகம்பிரியாளோடு தன்னடியார்களின் மன வீடுகளில் தொடர்ந்து எழுந்தருள்கிறார்.
இந்த எளிவந்த தன்மையைப் பாடும் போதே சிவபெருமான் குருவடிவாய் திருமேனி கொண்டு வந்ததையும் ,திருப்பெருந்துறையில் தன்னை ஆட்கொண்டதையும்,குருவடிவு காட்டியதையும் நினைந்து உருகுகிறார் மாணிக்கவாசகர்
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்;
மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் !
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே !
செந்தழல் புரை திருமேனியுங் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்;
ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே !